Tuesday 16 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (16-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (16-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 16 மணி நேர பதற்றம் தீவிரவாதியின் பிடியில் பணயக் கைதியாக இருந்த 2 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு போலீஸ் அதிரடி தாக்குதலின் போது 2 பேர் பலி: 3 பேர் படுகாயம்




ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓட்டலில் தீவிரவாதியின் பிடியில் 16 மணி நேரம் பணயக் கைதியாக இருந்த 2 இந்தியர்கள் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்காக போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலின்போது 2 பேர் பலி ஆனார்கள். தீவிரவாதியும் சுட்டு கொல்லப்பட்டான். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிட்னி, டிசம்பர், 16-12-2014,
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப்பகுதி மார்ட்டின் பிளேஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் லிண்ட் கபே எனப்படும் ஓட்டல் உள்ளது.
பணயக்கைதிகள்
அந்த பகுதியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் பாராளுமன்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, அமெரிக்க, இந்திய தூதரகங்கள், இந்திய சுற்றுலா கழக அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி மற்றும் பல வர்த்தக நிறுவனங் கள் அமைந்து உள்ளன.
லிண்ட் கபே ஓட்டலில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணி அளவில் ஆண்கள், பெண்கள் என வாடிக்கையாளர்கள் பலர் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியுடன் அந்த ஓட்டலுக்குள் புகுந்தான். துப்பாக்கியை காட்டி மிரட்டி ஓட்டலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன், அங்கிருந்தவர்களை பணயக்கைதிகளாக சிறை பிடித்தான்.
ஓட்டலுக்குள் 2 இடங்களில் குண்டு வைத்து இருப்பதாகவும், மேலும் நகரில் 2 இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் பணயக்கைதிகளிடம் அவன் கூறினான்.
                                                                                                               மேலும், . . .  . .

ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் 2-வது கட்ட விசாரணை பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புகார் கொடுத்தனர்


மதுரை, டிசம்பர், 16-12-2014,
மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள குமார் என்பவர் சகாயம் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிரானைட் முறைகேடு குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். அவரிடம் 3 பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் புகார் கொடுத்தனர்.
சகாயம் விசாரணை
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை சென்னை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. அதன்படி, சகாயம் மதுரை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். கடந்த 3-ந்தேதி அவர் விசாரணையை தொடங்கினார்.
அப்போது மேலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கிரானைட் குவாரிகளாலும், அதன் உரிமையாளர்களாலும் பாதிக்கப்பட்டதாக புகார் மனுக்களை அளித்தனர். அதன்பின் சிலநாட்கள் இடைவெளிக்கு பின்பு சகாயம் மீண்டும் நேற்று அலுவலகத்திற்கு வந்தார்.
பெண் போலீசார் மனு
அவர் தனது 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். அவரிடம் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் சாந்தி,
                                                                                                  மேலும், . .  . .  

சென்னை ஏ.டி.எம். காவலாளி கொலை வழக்கு ரூ.1 லட்சம் பணத்துக்காக தீர்த்துக்கட்டிய நண்பர் அதிரடி கைது லாட்ஜில் வைத்து துண்டு துண்டாக வெட்டியதாக பரபரப்பு தகவல்கள்


சென்னை, டிசம்பர், 16-12-2014,
சென்னை ஏ.டி.எம். காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ரூ.1 லட்சம் பணத்துக்காக, சென்னை லாட்ஜில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டியது அம்பலமாகி உள்ளது.
காவலாளி வெங்கட்ராவ்
சென்னை புளியந்தோப்பு திருவேங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராவ் என்ற விஜயகுமார்(வயது 30). பட்டதாரியான இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு பணிக்கு இவர் செல்வார். சில நேரங்களில் சூப்பர்வைசர் வேலையும் செய்வார்.
திருமணமாகாத இவர் கடந்த 10 -ந்தேதி இரவு பணிக்கு சென்றார். அன்றைய தினம் இரவு முதல் அவர் திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுதொடர்பாக புளியந்தோப்பு போலீசில், வெங்கட்ராவின் தாயார் செல்லம்மாள் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
9 துண்டுகள்
இந்த நிலையில், காணாமல்போன வெங்கட்ராவ் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு,
                                                                                                                    மேலும், . . .  . .

கிறிஸ்துமஸ் விடுமுறை குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, டிசம்பர், 16-12-2014,
கிறிஸ்துமஸ் விடுமுறை குறித்த மத்திய அரசின் சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாகவும் தான் உள்ளன.
கிறித்தவ பெருமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்பாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் பெரு விழாவிற்கு ஊறு தேடும் வகையில் நடந்து கொள்ள மத்திய அரசில் சிலர் முயற்சிப்பது தெரிகிறது. அதாவது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபைத் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளை “நல்லாட்சி தினம்” என்ற பெயரால் டிசம்பர் 25-ந் தேதியன்று, அதாவது கிறிஸ்துமஸ் நாளன்று கொண்டாடுவதற்கு முன்வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இக்கட்டான நிலை
அதையொட்டி மத்திய பா.ஜ.க. அரசு சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அன்றையதினம் கட்டுரை போட்டிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியிருக்கிறது.
                                                                                        மேலும், .  . . . . .

No comments:

Post a Comment