Saturday 13 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (14-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (14-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஐ.எஸ். அமைப்புக்கு இணையதளம் மூலம் ஆட்களை திரட்டியதாக குற்றச்சாட்டு பெங்களூருவில் தீவிரவாதி கைது மடிக்கணினி, செல்போன் பறிமுதல்


ஐ.எஸ். அமைப்புக்கு இணையதளம் மூலம் ஆட்களை திரட்டிய குற்றச்சாட்டின் பேரில் பெங்களூருவில் தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு, டிசம்பர், 14-12-2014,
உலகத்துக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ள இயக்கம், ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்.
‘டுவிட்டர்’ கணக்கு
தற்போது, ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற இந்த இயக்கத்துக்கு ஆதரவான தகவல்கள், படங்கள், கருத்துக்கள் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்தன.
‘ஷமி விட்னஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த ‘டுவிட்டர்’ கணக்கை 17 ஆயிரம் பேர் பின்பற்றி வந்தனர். ஷமி விட்னஸ் ‘டுவிட்டர்’ தகவல்களை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் மாதம்தோறும் பார்த்துள்ளனர்.
கையாண்டு வந்தவர் யார்?
இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவான இந்த ‘டுவிட்டர்’ கணக்கை கையாண்டு வருவது, பெங்களூருவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், அதிகாரியாக பணியாற்றிவந்த மெஹதி என்பவர்தான் என்ற பரபரப்பு தகவலை இங்கிலாந்து நாட்டின் ‘சேனல் 4’ டெலிவிஷன் நேற்று முன்தினம் அம்பலப்படுத்தியது. ஆனால் அவரது உயிருக்கு ஆபத்து என்பதால் முழுப்பெயர் வெளியிடப்படவில்லை என்று அந்த டெலிவிஷன் கூறியது.
மெஹதி, தன்னைத்தானே ஐ.எஸ். இயக்கத்தின் தென் பகுதி தளபதியாக அறிவித்துக்கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறார்.
                                                                                                             மேலும், . . . . 

மெட்ரோ ரெயில் சேவைக்காக திருமங்கலம் - ஷெனாய் நகர் இடையே 3 கி.மீ. சுரங்கப்பாதை பணி நிறைவு கோயம்பேடு - எழும்பூர் மார்க்கத்தில் 2016-மார்ச் மாதம் ரெயில் இயக்க திட்டம்


சென்னை, டிசம்பர், 14-12-2014,
ஷெனாய் நகர் - திருமங்கலம் இடையே 3 கிலோ மீட்டர் தூரத்திலான சுரங்கப்பாதை பணி நேற்று நிறைவடைந்தது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கோயம்பேடு - எழும்பூர் மார்க்கத்தில் ரெயில் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவை
சென்னையில் வண்ணாரபேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் சுரங்கப்பாதை 24 கிலோ மீட்டர் தூரமும், 21 கிலோமீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட வழித்தடத்திலும் பணிகள் நடந்து வருகிறது. இதில் மொத்த தூரத்தில் 55 சதவிகிதம் சுரங்கப்பாதையாகும்.
ஆக மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து வரும் பணியில், தரைக்குமேல் 13 ரெயில் நிலையங்களும், சுரங்கப்பாதையில் 19 ரெயில் நிலையங்கள் உட்பட 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுரங்கப்பாதை மற்றும் உயர்த்தப்பட்ட சாலைகளில் தலா 5 ஆயிரம் வீதம் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கப்பாதையில் விஷேச ரெயில்
முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்த்தப்பட்ட பாதையில் பணிகள் நிறைவடைந்து, நவீன தொழில்நுட்பத்தில் ரெயில்கள் இயக்கப்பட இருப்பதால் கடந்த 10 மாதமாக சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. தற்போது திருமங்கலம்- அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு - ஷெனாய் நகர் வரை 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 பாதையிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் 5 கட்டங்களாக நடந்து வரும் சுரங்கம் தோண்டும் பணியில் முதல் கட்டமான பணி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. அதுவும் பகல் 11.30 மணி அளவில் சுரங்கம் தோண்டும் எந்திரம் (டணல் போரிங் மிஷின்) நிர்ணயிக்கப்பட்ட இடத்தை உடைத்துக் கொண்டு திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைந்து பணியை நிறைவு செய்தது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததுடன், துள்ளி குதித்து தங்களுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.
இது ஒரு மெட்ரோ ரெயில் திருவிழா போன்று இருந்தது.
                                                                                                                     மேலும், . . . . 

சாரதா சிட்பண்ட் மோசடியில் மந்திரி கைது: புகைப்படம் தான் ஆதாரம் என்றால் பிரதமரையும் கைது செய்ய வேண்டும் மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு

கொல்கத்தா, டிசம்பர், 14-12-2014,
சாரதா சிட்பண்ட் மோசடியில் மந்திரி மதன் மித்ராவின் சதித்திட்டத்திற்கு புகைப்படம் தான் ஆதாரம் என்றால் பிரதமர் மோடியையும் சகாரா குரூப் மோசடியில் கைது செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
சாரதா சிட்பண்ட் மோசடி
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் சாரதா சிட்பண்டில் பல கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறி ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குணால் கோஷ், ஸ்ரீனிஜாய்போஸ், முன்னாள் டி.ஜி.பி. ரஜத்மஜும்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் மாநில போக்குவரத்து மந்திரி மதன்மித்ரா கைது செய்யப்பட்டார்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு மேல்-சபை எம்.பி. அகமது அசன், மாநில ஜவுளி மந்திரி ஷியாமாபடா முகர்ஜி ஆகியோரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. மதன்மித்ரா முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நம்பிக்கைக்குரியவர் என்றும், நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
கண்டன போராட்டம்
மதன் மித்ரா கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று மேற்குவங்காள மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியது. நேற்று மதன் மித்ராவை அலிபூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
வழிநெடுங்கிலும் கட்சி தொண்டர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி இருந்தனர்.
                                                                                        மேலும், . .  . .

யானைக்கவுனியில் வாகன சோதனையின்போது நகை வியாபாரியை மிரட்டி ரூ.1½ லட்சம் பறித்த போலீஸ்காரர்கள் உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை

சென்னை, டிசம்பர், 14-12-2014,
யானைக்கவுனியில் வாகன சோதனையின்போது நகை வியாபாரியை மிரட்டி ரூ.1½ லட்சம் பறித்த போலீஸ்காரர்களிடம் உயர் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை வியாபாரி
ஆந்திரா மாநிலம் வாரங்காலை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 42). நகை வியாபாரியான இவர் நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் சென்னை சென்டிரல் வந்தார். பின்னர், அங்கிருந்து ஆட்டோவில் சவுகார்பேட்டை நோக்கி சென்றார். அவர் வைத்திருந்த பையில் நகை வாங்குவதற்காக ரூ.32½ லட்சம் வைத்திருந்தார்.
வால்டாக்ஸ் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, யானைக்கவுனி காவல் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த 4 போலீஸ்காரர்கள் வழி மறித்தனர்.
                                                                                                       மேலும், . . .  .

No comments:

Post a Comment