Tuesday 30 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

162 பேருடன் மலேசிய விமானம் வெடித்து சிதறியது உறுதி: கடலில் மிதந்த பயணிகளின் உடல்கள் மீட்பு அதிகாரிகள் தகவல்



ஜகார்த்தா, டிசம்பர், 31-12-2014,
162 பேருடன் மாயமான மலேசிய விமானம் வெடித்து சிதறி கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பலியான பயணிகளின் உடல்களை இந்தோனேஷிய மீட்பு குழுவினர் நேற்று மீட்டனர்.
மாயமான விமானம்
இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம் கடந்த 28-ந் தேதி காலை புறப்பட்டுச் சென்றது. அதில் விமான ஊழியர்கள் 7 பேரும், 155 பயணிகளும் இருந்தனர்.
இதில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 149 பேரும், தென்கொரியர்கள் 3 பேரும், இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தலா ஒரு பயணியும் இருந்தனர். இவர்களில் 17 பேர் சிறுவர்-சிறுமிகள். இந்தியாவைச் சேர்ந்த பயணிகள் யாரும் இதில் பயணம் செய்யவில்லை.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜாவா கடல் பகுதியில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு மையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது.
                                                                                                           மேலும், . . .  .

தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் ஆகிறார்? அடுத்த மாதம் நடக்கும் பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்

சென்னை, டிசம்பர், 31-12-2014,
மு.க.ஸ்டாலின் தி.மு.க. பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
தி.மு.க. உட்கட்சி தேர்தல்
தி.மு.க.வில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. உட்கட்சி தேர்தல் முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதம் ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி முதல் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 65 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் 60 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
பொதுக்குழு கூடுகிறது
எஞ்சியுள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிடும்.
                                                                                                              மேலும், . . .  .

போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம்: தொழிற்சங்கத்தினர், இன்று அமைச்சருடன் பேச்சுவார்த்தை போராட்டம் முடிவுக்கு வருமா?

சென்னை, டிசம்பர், 31-12-2014,
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று (புதன்கிழமை) அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பேச்சுவார்த்தை
ஊதிய ஒப்பந்தம் மற்றும் பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் குறித்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று மாலை 5.50 மணியளவில், தொழிலாளர் நலத்துறை சிறப்பு துணை ஆணையர் யாஸ்மின் பேகம், சென்னை போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆல்பர்ட் தினகரன் முன்னிலையில், வேலை நிறுத்த போராட்டம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் முன்னிலையில் இன்று பேச்சுவார்த்தை
கூட்டம் முடிந்து வெளியில் அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் சின்னச்சாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, “தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. சார்பில், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில், அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து பேச ஆட்சேபனை இல்லை என்று கடிதம் எழுதி கொடுக்க வேண்டும் என்று நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.
தொ.மு.ச. கடிதத்தை எழுதி கொடுத்ததன் அடிப்படையில், நாளை(இன்று) காலை 10 மணிக்கு கோட்டையில் உள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் அலுவலகத்தில்
                                                                                                    மேலும், . . . . . 

நள்ளிரவில் தாலிச்செயினை காப்பாற்ற நடந்த போராட்டம்: ஓடும் மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயரை தள்ளிவிட்ட கொள்ளையன் வடமாநில ஆசாமியா? போலீசார் விசாரணை

சென்னை, டிசம்பர், 31-12-2014,
சென்னையில் நள்ளிரவில் ஓடும் மின்சார ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்டு தாலிச்செயினுடன் கொள்ளையன் தப்பிவிட்டான். அவன் வடமாநில ஆசாமியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் என்ஜினீயர்
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி அசோக்நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முனீஸ்வரி (வயது 26). முனீஸ்வரியும், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம்போலவே இருவரும் காலையில் வேலைக்கு செல்ல தயாரானார்கள்.
மின்சார ரெயில் பயணம்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த பிரச்சினை காரணமாக பஸ் வருமோ? வராதோ? என்ற சந்தேகத்தில் காலையில் மின்சார ரெயிலில் முனீஸ்வரி வேலைக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பும்போதும் தான் மின்சார ரெயிலிலேயே வருவதாகவும், தனது கணவரை கடற்கரை ரெயில் நிலையத்துக்கு வந்து அழைத்து செல்லும்படியும் முனீஸ்வரி கூறியிருந்தார்.
அதே போலவே நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், தனது மனைவிக்கு போன் செய்து தான் கடற்கரை ரெயில் நிலையத்தில் உனக்காக காத்திருக்கிறேன் என்று நாகராஜன் கூறினார்.
                                                                                                                 மேலும், . .  . . .

No comments:

Post a Comment