Thursday 25 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

கூட்டணி ஆட்சிக்கு பா.ஜனதா முயற்சி புதிய அரசு அமைப்பது யார்? காஷ்மீரில் இழுபறி நீடிப்பு
காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது யார் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கூட்டணி அரசு அமைக்க பாரதீய ஜனதா கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு இருக்கிறது.
ஸ்ரீநகர், டிசம்பர், 26-12-2014,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தனிப்பெரும் கட்சி
87 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 44 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அங்கு மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. அதனை தொடர்ந்து பா.ஜனதா- 25, தேசிய மாநாட்டு கட்சி- 15, காங்கிரஸ்- 12, சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மிகப்பெரிய கட்சியாக பாரதீய ஜனதாவால் வரமுடியாவிட்டாலும் கானி லோனின் 2 இடங்கள், பா.ஜனதா போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிபெற்ற 4 சுயேச்சைகள், தேசிய மாநாட்டு கட்சியின் 15 இடங் கள் ஆகியவற்றை சேர்த்தால் 46 இடங்கள் கிடைக்கிறது.
என்.சி.பி.யுடன் பேச்சு
எனவே பா.ஜனதா தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து காஷ்மீரில் முதல் முறையாக ஆட்சியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டது.
                                                                                                           மேலும், . . .  .

கடன் கொடுக்க மறுத்ததால் விசைத்தறி அதிபர், மகள் கொலை நெல்லையை சேர்ந்த 3 பேர் கைது


கோவை, டிசம்பர், 26-12-2014,
கோவை அருகே விசைத்தறி அதிபரையும், மகளையும் குத்திக்கொன்ற நெல்லையை சேர்ந்த கொலையாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசைத்தறி அதிபர்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது45). விசைத்தறி அதிபரான இவருடைய மனைவி பெயர் சரோஜினி (45). மகள்கள் வினோதினி (26), யசோதா (23). வினோதினிக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வினோதினி வந்தார்.
ராக்கியப்பன் வீட்டை ஒட்டியுள்ள இடத்தில் விசைத்தறி கூடத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். சோமனூர் பள்ளபாளையத்தில் தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீட்டில் வசித்து வரும் குமார், சம்பள முன்தொகையாக ரூ.50 ஆயிரம் வேண்டும் என்று ராக்கியப்பனிடம் கேட்டார்.
ஆத்திரம்
பணம் கிடைக்க தாமதமான நிலையில், கடந்த வாரம் பரமசிவம் என்ற வாலிபரை வேலைக்கு சேர்ப்பதற்காக குமார் அழைத்து வந்தார்
                                                                                                                            மேலும், . . . . 

பெரம்பலூரில் பெண் அதிகாரி தீக்குளித்து சாவு தந்தையை கணவர் தாக்கியதால் விபரீத முடிவு

பெரம்பலூர், டிசம்பர், 26-12-2014,
கண்முன்னே தனது தந்தையை கணவர் தாக்கியதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வருவாய் பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வருவாய் ஆய்வாளர்
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் ராஜூ. இவர் பட்டு வளர்ப்பு துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிர்மலா(வயது 26). இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் பகுதி வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும், திருச்சியை சேர்ந்த இளையராஜாவுக்கும் (35) கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இளையராஜா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கணவருடன் தகராறு
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் நிர்மலா தனியாக வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்தார். ராசிபுரத்தில் தங்கி பணியாற்றி வரும் இளையராஜா பள்ளி விடுமுறை நாட்களில் பெரம்பலூருக்கு வந்து செல்வார். திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக சென்று வந்த அவர்களது வாழ்க்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் செய்தார்.
                                                                                                        மேலும், . . . . 

போர் குற்ற விசாரணை நடத்த தயார் என்று தேர்தலுக்காக ராஜபக்சே இரட்டை வேடம் போடுகிறார் கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை, டிசம்பர், 26-12-2014,
தேர்தலுக்காக, போர் குற்ற விசாரணை நடத்த தயார் என்று ராஜபக்சே இரட்டை வேடம் போடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிபர் தேர்தல்
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனவரி 8-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 19 பேர் மனு செய்திருந்த போதிலும், 2 பேர் மட்டுமே பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி பால சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக்கின்றன. ரனில் விக்கிரமசிங்கேயும், சந்திரிகாவும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டியதற்கு மாறாக, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று நம்முடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அந்தச் செய்தி இந்தியா முழுவதும் கண்டனத்திற்குரிய ஒன்றாக இருந்தது.
புதிய வாக்குறுதி
இந்த தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிடும் சிறிசேனா,
                                                                                                                                மேலும்,. . . . .

No comments:

Post a Comment