Sunday 7 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (08-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (08-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

திட்டக்கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்படும் புதிய அமைப்பில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு முதல்-மந்திரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி


டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக்கமிஷனுக்கு பதிலாக ஏற்படுத்தப்படும் புதிய அமைப்பில் மாநிலங்களுக்கு முக்கிய பங்கு இருக்கும் என்று உறுதி அளித்தார்.
புதுடெல்லி, டிசம்பர், 08-12-2014,
மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை திட்டக்கமிஷன் இறுதி செய்கிறது.
திட்டக்கமிஷன்
பிரதமர் தலைமையில் இக்கமிஷன் செயல்படுகிறது. மாநில முதல்-மந்திரிகள், திட்டக்கமிஷன் துணைத்தலைவரையும், அதிகாரிகளையும் சந்தித்து, தங்கள் மாநிலத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
1950-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி, மத்திய மந்திரிசபை தீர்மானத்தின் அடிப்படையில்தான், திட்டக்கமிஷன் அமைக்கப்பட்டது.
                                                                                                                         மேலும், . . .  .

காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஸ்ரீநகர், டிசம்பர், 08-12-2014,
பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக இன்று காஷ்மீர் மாநிலம் வருகிறார். இதையொட்டி அவருடைய கூட்டம் நடைபெறும் ஸ்ரீநகர் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மோடி இன்று வருகை
காஷ்மீர் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(திங்கட்கிழமை) காஷ்மீரின் கோடை கால தலைநகரான ஸ்ரீநகருக்கு வருகிறார். அங்குள்ள எஸ்.கே. கிரிக்கெட் மைதானத்தில் பா.ஜனதா சார்பில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதையொட்டி கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சோனாவார் பகுதி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மைதானத்தைச் சுற்றி மத்திய ரிசர்வ் படை போலீசாரும், துணை ராணுவத்தினரும் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
போக்குவரத்துக்கு தடை
மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அப்பகுதியில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
                                                                                               மேலும், . . . . 

பள்ளி ஆசிரியை அடித்துக்கொலை போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை

சாத்தான்குளம், டிசம்பர், 08-12-2014,
பள்ளி ஆசிரியையை அடித்துக்கொலை செய்த வாலிபர் போலீசுக்கு பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிக்கூட ஆசிரியை
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அன்னாள்நகரை சேர்ந்தவர் அந்தோணி மைக்கேல் சகாயம். இவர் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி ஜெஸ்மிலா அன்னரோசி (வயது 39). அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் காலையில் அந்தோணி மைக்கேல் சகாயம் வேலைக்கு சென்று விட்டார். ஜெஸ்மிலா அன்னரோசியும், அவருடைய குழந்தைகளும் வீட்டில் இருந்தனர். மாலையில் குழந்தைகள் வெளியில் சென்று இருந்தனர். அப்போது அந்தோணி மைக்கேல் சகாயம் வீட்டுக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி நெஞ்சை பதறச் செய்தது.
சாவு
ஜெஸ்மிலா அன்னரோசி ரத்த வெள்ளத்தில் குற்றுயிராக கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
                                                                                                       மேலும், . .  .

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறுகிறது? மாவட்ட செயலாளர்களுடன் வைகோ இன்று ஆலோசனை

சென்னை, டிசம்பர், 08-12-2014,
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் வைகோ இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தி முடிவை அறிவிக்கிறார்.
ம.தி.மு.க. அதிருப்தி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.தி.மு.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சிக்கு 7 தொகுதிகள் வழங்கப்பட்டது. விருதுநகர் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டார். என்றாலும், 7 தொகுதிகளிலும் ம.தி.மு.க. தோல்வியடைந்தது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்த நிலையில், நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே அழைக்கப்பட்டார்.
                                                                                                       மேலும், . . . . 

No comments:

Post a Comment