Saturday 20 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (21-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (21-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் சென்னை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு



தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்று சென்னை மறைமலைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.
சென்னை, டிசம்பர், 21-12-2014,
பா.ஜ.க. தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு, முதல் அரசியல் பயணமாக அமித்ஷா நேற்று சென்னை வந்தார்.
2 நாள் பயணமாக வந்துள்ள அவர், நேற்று மாலை சென்னையை அடுத்த மறைமலைநகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
வரவேற்பு
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தும் வகையில், தமிழக சட்டமன்ற வடிவில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு மாலை 5.30 மணிக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வந்தார்.
அவரை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
கங்கை அமரன்
அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
                                                                                                        மேலும், . . . .  .

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜார்கண்டில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கிறது காஷ்மீரில் தொங்கு சட்டசபை?

புதுடெல்லி, டிசம்பர், 21-12-2014,
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஜார்கண்டில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என தெரியவந்துள்ளது. காஷ்மீரில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல், தொங்கு சட்டசபை அமையலாம்.
கருத்துக்கணிப்பு
ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிற ஜார்கண்டிலும், உமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் காஷ்மீரிலும் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.
நேற்று ஐந்தாவது இறுதிக்கட்ட தேர்தல் முடிந்துள்ளது.
                                                                                                                    மேலும், . . . . . 

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கருணாநிதி கேக் வெட்டினார்

சென்னை, டிசம்பர், 21-12-2014,
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், கருணாநிதி ‘கேக்’ வெட்டிக் கொண்டாடினார்.
சாதனையாளர் விருது
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தி.மு.க. தலைவர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் ‘கேக்கை’ வெட்டினார்.
மேலும், இ.சி.ஐ. திருச்சபைகளின் தலைமை பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கு, ஆன்மீகப் பணிக்காகவும், ஆர்.டி.யு. அமைப்பின் நிறுவனர் ஜேம்ஸ் கிம்டனுக்கு, சமுதாயப் பணிக்காகவும், அருள் சகோதரி ரத்தினபாயுக்கு, கல்வி பணிக்காகவும், வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பொற்கிழிகளை கருணாநிதி வழங்கினார்.
மீனவர்கள் சந்திப்பு
விழாவில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடிலை, தி.மு.க. பொருளாளர்மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, தொண்டு நிறுவனங்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக அண்மையில் இலங்கை சிறையில் தூக்குதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு, தலா ரூ.1 லட்சம் பொற்கிழிகளை கருணாநிதி வழங்கினார்.
இந்த விழாவில், கருணாநிதி சிறப்புரையாற்றி பேசியதாவது:-
                                                                                                                        மேலும், . . . . 

காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் சரத்குமார் பேச்சு

கும்பகோணம், டிசம்பர், 21-12-2014,
காவிரியில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம் என்று சரத்குமார் கூறினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு 2 அணைகள் கட்டுவதை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காந்திபூங்கா அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயப்பிரகாஷ், கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நதிகள் தேசியமயம்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                மேலும், . . . .  .

No comments:

Post a Comment