Thursday 11 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டெல்லியில் நரேந்திர மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

புதுடெல்லி, டிசம்பர், 12-12-2014,
கூடங்குளத்தில், மேலும் 2 அணு உலைகள் அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி-புதின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதின் வந்தார்
கூடங்குளத்தில், ஏற்கனவே 2 உலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3-வது மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் திட்டமும் உள்ளது. ஆனால், அதுதொடர்பாக இந்தியா-ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதமாகி வந்தது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு வந்தார்.
நரேந்திர மோடி, பிரதமர் ஆன பிறகு அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும்.
                                                                                மேலும், . . . . 

500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு கூடுதல் கட்டணத்தை அரசே செலுத்தும் தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்கட்டணம் 15 சதவீதம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது



தமிழ்நாட்டில் அனைத்துவகை மின்நுகர்வோருக்கும் மின்சார கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
சென்னை, டிசம்பர், 12-12-2014,
மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வந்தது.
மின்கட்டணம் உயர்வு
இந்த நிலையில், மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தானாக முன்வந்து மின் கட்டணம் மற்றும் மின் செலுத்துதல் கட்டணங்களை மாற்றி அமைப்பது தொடர்பான பொது அறிவிப்பினை 23.9.2014 மற்றும் 24.9.2014 அன்று செய்தித்தாள்களிலும், ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிட்டு பொதுமக்கள், சம்மந்தப்பட்ட நபர்களின் ஆட்சேபனைகள், ஆலோசனைகள் கோரப்பட்டன.
ஆட்சேபனைகள் ஆலோசனைகள் அனுப்புவதற்கான கடைசிநாள் 31.10.2014 என நிர்ணயம் செய்யப்பட்டது.
                                                                                                  மேலும், . . . . 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்துக்கு தடையில்லை ரூ.5 கோடி டெபாசிட் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, டிசம்பர், 12-12-2014,
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா‘ படத்தை வெளியிட தடையில்லை என்று நேற்று தீர்ப்பு அளித்த மதுரை ஐகோர்ட்டு, 5 கோடி ரூபாயை ஐகோர்ட்டு வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
‘லிங்கா’ பட வழக்கு
மதுரை சின்ன சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர், ரவிரத்தினம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணை மற்றும் அணையைக் கட்டிய பென்னிகுயிக் வரலாறை பின்னணியாக கொண்டு ‘முல்லைவனம் 999’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். அந்த கதையை திருடி ‘லிங்கா’ படத்தை தயாரித்துள்ளனர். எனவே, ‘லிங்கா’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எனது கதையை திருடிய ‘லிங்கா’ படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவில், “மனுதாரரின் முக்கியமான கோரிக்கை பதிப்புரிமை சட்டம் தொடர்பானது என்பதால் மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. மனுதாரர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம்” என்று கூறப்பட்டு இருந்தது.
‘அப்பீல்’
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ரவிரத்தினம், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ‘அப்பீல்’ செய்தார். அந்த மனுவில் அவர், கூறி இருந்ததாவது:-
                                                                                                                 மேலும், . .  . . 

ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவருக்கும் மீனவர் பிரச்சினையில் பா.ஜ.க.வை குற்றஞ்சாட்ட எந்த உரிமையும் இல்லை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை, டிசம்பர், 12-12-2014,
ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகிய இருவருக்கும் மீனவர் பிரச்சினையில் பா.ஜ.க.வை குற்றஞ்சாட்டுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாரதியார் பிறந்தநாள்
தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை கமலாலயத்தில் நேற்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகனராஜூலு, மாவட்ட தலைவர்கள் பிரகாஷ், ஜெய்சங்கர், காளிதாஸ், மத்திய சென்னை மாவட்ட வர்த்தக அணி தலைவர் லலித் ஜெயின், மகளிரணி மாவட்ட தலைவர்கள் ரமா, லலிதா, சைதை பகுதி தலைவர் மார்க்கெட் தேவராஜ் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
இதற்கிடையில் தமிழக பா.ஜ.க. வர்த்தகப்பிரிவு மாநில தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் எம்.பி. நரசிம்மன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதையடுத்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                                                 மேலும், . .  . .

No comments:

Post a Comment