Wednesday 24 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,


Christmas is church bells chiming joyfully across the wintry sky, telling of the miracle that came from God on high. Merry Christmas
Photo : anton joel kennedy and Rithikaa Haley kennedy

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சென்னை, டிசம்பர், 25-12-2014,
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவர்களை பொறுத்தவரை கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களுக்கு-பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சலுகையை 1974-ம் ஆண்டில் வழங்கியது தி.மு.க. ஆட்சி. இந்த சலுகையை மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்தவர்களின் அனைத்து தலைமுறைகளுக்கு நீட்டித்து 1975-ல் ஆணையிட்டது.
1989-ல் மாநில சிறுபான்மையினர் நல ஆணையம், 1999-ல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம், 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்ககம் ஆகியவற்றை உருவாக்கி, சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்திட வகை செய்தது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த மதமாற்ற தடை சட்டத்தை 2006-ல் ரத்து செய்தது.
செய்த பணிகள்
2010-ல் வள்ளுவர்கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திற்கு அன்னை தெரசா மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு 1968-ல் பேரறிஞர் அண்ணா தலைமையேற்று நடத்திய 2-ம் உலக மாநாட்டின்போது, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சிலைகள் எடுத்து சிறப்பித்தது. நெல்லை மாவட்டம் இடையன்குடியில் கால்டுவெல் வாழ்ந்த இடம் நினைவிடமாக புதுப்பிக்கப்பட்டது. முல்லை பெரியாறு கட்டி முடித்த பென்னிகுவிவுக்கு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் சிலையெடுக்கப்பட்டது.
                                                                                                                           மேலும், . .  . .

அசாம் தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 67 ஆக உயர்வு கலவரத்தை கட்டுப்படுத்த காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு

கவுகாத்தி, டிசம்பர், 25-12-2014,
அசாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. இதையடுத்து ஆதிவாசிகள், போடோ வகுப்பினரின் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்
அசாம் மாநிலத்தில் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் ஆகிய மாவட்டங்களில் ஆதிவாசிகள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் போடோ தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம், போடோ தீவிரவாதிகள் அதி நவீன துப்பாக்கிகளுடன் சோனித்பூர், கோக்ராஜார், சிராக் மாவட்டங்களில் உள்ள சோனாஜூலி, விஸ்வநாத் சரியாலி, உல்தாபாணி, மதுபூர் ஹதிஜூலி, ருமிகாதா ஆகிய 5 ஆதிவாசிகள் கிராமங்களுக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
பலி 67 ஆக உயர்வு
இதில் 34 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
                                                                                             மேலும், . .  . . .  .

மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது மதன்மோகன் மாளவியாவுக்கும் வழங்கப்படுகிறது

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்துமகா சபா தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி, டிசம்பர், 25-12-2014,
நாட்டுக்கு மிகப்பெரிய சேவை செய்த தலைவர்களுக்கு மத்திய அரசு உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
‘பாரத ரத்னா’ விருது
மூதறிஞர் ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், காமராஜர், எம்.ஜி.ஆர்., பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. இதுவரை 43 பேர் இந்த விருதை பெற்று இருக்கிறார்கள்.
பாரதீய ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய்க்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைவர்கள் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்தனர்.
கோரிக்கை வலுத்தது
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த ஆண்டில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த விருதை வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
                                                                                                         மேலும், . .  . . .

மரணம் அடைந்த டைரக்டர் கே.பாலசந்தருக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி சென்னையில், உடல் தகனம் நடந்தது

சென்னை, டிசம்பர், 25-12-2014,
மரணம் அடைந்த டைரக்டர் கே.பாலசந்தரின் உடலுக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவருடைய உடல் தகனம் சென்னையில் நேற்று மாலை நடந்தது.
கே.பாலசந்தர்
தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர்.
காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
அஞ்சலி
அவருடைய உடலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாலசந்தர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், த.மா.கா. (மூப்பனார்) தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் மத்திய மந்திரி நெப்போலியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
                                                                                                                   மேலும், . . . . . .

No comments:

Post a Comment