Saturday 6 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் மக்கள் நீதிமன்றம் விசாரணை 15 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு ரூ.1,390 கோடி மதிப்புள்ள பிரச்சினைகள் முடித்துவைக்கப்பட்டன

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 15 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
சென்னை, டிசம்பர், 07-12-2014,
சுப்ரீம் கோர்ட்டு முதல் குற்றவியல் கோர்ட்டு வரை ஏராளமான வழக்குகள் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கின்றன.
மக்கள் நீதிமன்றம்
நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து பைசல் செய்ய, தேசிய சட்டப்பணி ஆணைக்குழு ஆண்டுக்கு இருமுறை தேசிய அளவில் ‘மெகா லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய அளவில் லோக் அதாலத் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நடந்த இந்த தேசிய லோக் அதாலத்தை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும், தேசிய சட்டப்பணி ஆணைக்குழுவின் தலைவருமான நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தொடங்கிவைத்தார்.
அவர், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இருந்தபடி நேற்று காலை 10 மணி அளவில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நாடு முழுவதும் லோக் அதாலத்தை தொடங்கிவைத்தார்.
                                                                                                   மேலும், . . . . 

சந்தித்து பேசுவதில் தான் இடைவெளி ஏற்பட்டுள்ளது: பா.ஜ.க.-ம.தி.மு.க. கூட்டணியில் எந்த தொய்வும் இல்லை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை, டிசம்பர், 07-12-2014,
பா.ஜ.க. - ம.தி.மு.க. கூட்டணியில் எந்தவித தொய்வும் ஏற்படவில்லை என்றும், அவரை சந்தித்து பேசுவதில் தான் இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அம்பேத்கர் நினைவு நாள்
தமிழக பா.ஜ.க. சார்பில் அம்பேத்கரின் நினைவு நாள், தமிழக பா.ஜ.க. தலைமையிடமான சென்னை கமலாலயத்தில் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜூலு, மாநில துணைத்தலைவர்கள் சக்கரவர்த்தி, வானதி சீனிவாசன், மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.கே.எஸ்., வடசென்னை மகளிரணி செயலாளர் கோமதி, மத்திய சென்னை மாவட்ட வர்த்தக அணி தலைவர் லலித் ஜெயின் ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தூய்மை இந்தியா என்ற பாடல் சி.டி.யை வெளியிட்டார். அதன்பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
                                                                                            மேலும், . . . .

பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி த.மு.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் பழ.நெடுமாறன், தா.பாண்டியன் பங்கேற்பு

சென்னை, டிசம்பர், 07-12-2014,
பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி த.மு.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன், தா.பாண்டியன் பங்கேற்றனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவேண்டும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும், பாபர் மசூதி வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தென் சென்னை மாவட்ட தலைவர் முகமது அபுபக்கர் என்ற கோரி தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் அலி முன்னிலை வகித்தார்.
பாபர் மசூதி மீண்டும் கட்டவேண்டும்
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
                                                                                                  மேலும், . . .

ராஜபக்சே வருகையை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்: வைகோ அறிவிப்பு

சென்னை, டிசம்பர், 07-12-2014,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்சே டிசம்பர் 9-ந் தேதி திருப்பதிக்கு வந்து, 10-ந் தேதி காலையில் வெங்கடாசலபதி ஆலயத்தில் தரிசனம் செய்யப் போகிறாராம். மத்திய அரசு கொடுக்கின்ற ஊக்கத்தினால்தான் இப்போது திருப்பதிக்கு வரப்போகிறார்.
ராஜபக்சே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்று சில ஜோதிடர்கள் கூறிய யோசனையின் பேரில் இங்கு வருகிறார்.
                                                                                                         மேலும், . . .

No comments:

Post a Comment