Friday 5 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்க சதி அதிகாரி உள்பட 13 வீரர்கள் கொல்லப்பட்டனர் தீவிரவாதிகள் தாக்குதலில் 23 பேர் பலி பிரதமர் மோடி கடும் கண்டனம்
காஷ்மீரில், சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் நேற்று தீவிரவாதி கள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், தீவிரவாதிகள் உள்பட 23 பேர் பலி ஆனார்கள். இந்த தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஸ்ரீநகர், டிசம்பர், 06-12-2014,
காஷ்மீர் மாநில சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
நரேந்திர மோடி பிரசாரம்
இந்த தேர்தலை புறக்கணிக்குமாறு தீவிரவாதிகள் அழைப்பு விடுத்த போதிலும், இதுவரை நடந்து முடிந்த 2 கட்ட வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 71 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த நிலையில், 3-வது கட்ட வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது.
வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஊரி என்ற இடத்தில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பேச இருக்கிறார்.
                                                                                                          மேலும், . .  . 

கொலை வழக்கில் நடிகைக்கு நிபந்தனை ஜாமீன் ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, டிசம்பர், 06-12-2014,
திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை கொலை செய்ததாக பதிவான வழக்கில் கைதான, நடிகைக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் கொலை
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரொனால்டு பீட்டர் பிரிண்சோ. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் காணாமல் போனார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த போலீசார், ரொனால்டு பீட்டர் பிரண்சோ கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தனர்.
                                                                                                  மேலும், . . . .

38 மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்: கச்சத்தீவை மீட்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேறியது
சென்னை, டிசம்பர், 06-12-2014,
கச்சத் தீவை மீட்பதற்காக மத்திய அரசை வலியுறுத்துவதற்காக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேறியது.
தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கச்சத் தீவை திரும்பப் பெறவும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீனவர்களின் மீன் பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி தீர் மானத்தை முன்மொழிந்து பேசி னார். அவர் கூறியதாவது:-
மீனவர்களுக்கு சலுகைகள்
மீனவர்களுக்கு தமிழக அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது.
                                                                                                       மேலும், . . . .

சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மந்திரி மன்னிப்பு கேட்டதால் பாராளுமன்றம் செயல்பட அனுமதிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் பிரச்சினையை பேசி தீர்க்குமாறு மேல்-சபையில், எதிர்க்கட்சிகளுக்கு குரியன் ஆலோசனை


புதுடெல்லி, டிசம்பர், 06-12-2014,
சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மந்திரி மன்னிப்பு கேட்டதால், பாராளுமன்றம் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரச்சினையை பேசி தீர்க்குமாறு, மேல்-சபையில் எதிர்க்கட்சிகளுக்கு துணைத்தலைவர் குரியன் ஆலோசனை கூறினார்.
மேல்-சபையில் அமளி
டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மத்திய பெண் மந்திரி நிரஞ்சன் ஜோதி சர்ச்சைக்கிடம் அளிக்கும் வகையில் பேசிய பேச்சு, மேல்-சபையில் நேற்று நான்காவது நாளாக விஸ்வரூபம் எடுத்தது.
ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு எம்.பி. பதவி ஏற்ற உடனேயே, வழக்கம்போல எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ‘மந்திரியை நீக்குங்கள்’ என கோஷம் போட தொடங்கினார்கள்.
தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் சபையை நண்பகல் 12 மணி வரை பி.ஜே.குரியன் ஒத்திவைத்தார்.
                                                                                          மேலும், . . . .

No comments:

Post a Comment