Friday 12 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (13-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (13-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.4,479 கோடி கருப்பு பண பட்டியல் முதல் முறையாக மத்திய அரசு வெளியிட்டது

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.4,479 கோடி கருப்பு பணம் பற்றிய பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
புதுடெல்லி, டிசம்பர், 13-12-2014,
சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பலரும் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி உள்ளனர்.
கருப்பு பண மீட்பு நடவடிக்கை
இந்த கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும், 11 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு தனது பணிகளை தொடங்கி உள்ளது.
628 பேர் பட்டியல்
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரை கொண்ட பட்டியலை மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்தது. பிரான்சு அரசிடமிருந்து பெற்ற அந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அப்படியே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் இந்த கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்து, சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது.
                                                                                            மேலும், . . . .

மின் கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் திரும்ப பெற கோரிக்கை

சென்னை, டிசம்பர், 13-12-2014,
மின் கட்டண உயர்வுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 15 சதவீதம் மின் கட்டணம் உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கருணாநிதி
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“புலி வருகிறது!” - “புலி வருகிறது!” என்று கடந்த சில மாதங்களாக மிரட்டிக்கொண்டிருந்த “மின் கட்டண உயர்வு” உண்மையில் வந்தே விட்டது
                                                                                                            மேலும், . . .  . .

சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரிப்பு லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய சர்வதேச மோசடி கும்பல் கைது


சென்னை, டிசம்பர், 13-12-2014,
சென்னையில் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பல லட்சம் பணத்தை சுருட்டிய சர்வதேச மோசடி கும்பல் கைது செய்யப்பட்டது.
வங்கி அதிகாரி புகார்
ஆக்சிஸ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் கேரள மண்டலத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி அசோக்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-
எங்கள் வங்கியின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை திருடி, அதன்மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து, லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளனர். பொருட்களையும் வாங்கி இருக்கிறார்கள். சென்னையில் செயல்படும், சர்வதேச மோசடி கும்பல் இந்த செயலில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த மனு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திட, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
                                                                                                                மேலும், . . .  . 

‘லிங்கா’ திரையிட்ட திரையரங்குகளில் கோலாகலம் ரஜினிகாந்த் 65-வது பிறந்தநாள் கொண்டாட்டம் நரேந்திரமோடி-கருணாநிதி, வைகோ உள்பட தலைவர்கள் வாழ்த்து

சென்னை, டிசம்பர், 13-12-2014,

ரஜினிகாந்த் 65-வது பிறந்தநாளை ரசிகர்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திரமோடி, கருணாநிதி, வைகோ, மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘ரஜினி 65’

‘சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நேற்று 65-வது பிறந்தநாளை கொண்டாடினார். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு முதல் முறையாக அவரது பிறந்தநாளில் ‘லிங்கா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதிகாலை 1 மணிக்கு ‘லிங்கா’ படத்தின் முதல் காட்சி சென்னை தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ரசிகர்கள் நள்ளிரவு முதலே கடும் குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் கூடியிருந்தனர். அதிகாலை 1 மணிக்கு தியேட்டர்களில் கேக் வெட்டி ரஜினி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகுரஜினியின் நேரடி படம் வெளியானதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது.
                                                                                                                    மேலும், . . .  .

No comments:

Post a Comment