Sunday 14 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

4-வது கட்டமாக 18 தொகுதிகளுக்கு தேர்தல் கடும் குளிரிலும் ஓட்டுப்போட வாக்காளர்கள் ஆர்வம் காஷ்மீரில் அமைதியான வாக்குப்பதிவு ஜார்கண்டில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது


காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்ட சபைகளுக்கு நேற்று 4-வது கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டுப் போட்டனர்.
ஸ்ரீநகர், டிசம்பர், 15-12-2014,
காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங் களின் சட்டமன்றங் களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
4-வது கட்ட வாக்குப்பதிவு
இதில் 3 கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில், இந்த மாநிலங்களில் 4-வது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
காஷ்மீரில் ஸ்ரீநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட 8 தொகுதிகள், அனந்த்நாக், சோபியான் மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு உட்பட்ட 10 தொகுதிகள் என 18 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.
மந்தமான தொடக்கம்
இந்த பகுதிகளில் கடுங்குளிர் வாட்டி எடுப்பதால், நேற்று காலையில் மிகவும் மந்தமான வாக்குப்பதிவே காணப்பட்டது.
                                                                                                     மேலும், . . . . 

செல்போன் மூலம் துப்பு துலங்கியது சென்னை ஏ.டி.எம். காவலாளி படுகொலை உடலை துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸ்களில் வைத்து விருத்தாசலம் அருகே வீசிச்சென்ற கொடூரம்


விருத்தாசலம், டிசம்பர், 15-12-2014,
விருத்தாசலம் அருகே, சென்னையைச் சேர்ந்த வங்கி காவலாளி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாகங்கள் 3 சூட்கேஸ் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு கிடந்தது.
சூட்கேஸ் பெட்டிகள்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது பாசிக்குளம் கிராமம். இந்த கிராமத்தில் வெள்ளை பாறை என்றழைக்கப்படும் ஒரு ஓடை உள்ளது. இங¢கு நேற்று மதியம் வழக்கம் போல் அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பாறையின் மீது செல்போன் ஒன்று கிடந்ததை பார்த்தனர்.
அந்த செல்போனை அவர்கள் ஆவலுடன் எடுக்க சென்ற போது, அங்கு 3 சூட்கேஸ் பெட்டிகள் கேட்பாரற்று கிடந்தன.
                                                                                                     மேலும், . . .  .

தீவிரவாதி மெஹதி கைது எதிரொலி பெங்களூரு போலீஸ் துணை கமிஷனருக்கு ‘டுவிட்டர்’ மூலம் மிரட்டல் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

பெங்களூரு, டிசம்பர், 15-12-2014,
தீவிரவாதி மெஹதி கைது எதிரொலியாக பெங்களூரு போலீஸ் துணை கமிஷனருக்கு ‘டுவிட்டர்’ மூலம் மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஐ.எஸ். இயக்க தீவிரவாதி கைது
ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தற்போது உலகத்துக்கே அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த இயக்கத்துக்கு ஆதரவான கருத்துக்களை, பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் மெஹதி என்பவர் ‘டுவிட்டர்’ சமூக வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்து வருவதாக இங்கிலாந்து நாட்டின் ‘சேனல் 4’ தொலைகாட்சி அம்பலப்படுத்தியது.
மேலும் அவரது ‘டுவிட்டர்’ கணக்கை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்தனர். இதையடுத்து, பெங்களூரு குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர், போலீஸ் துணை கமிஷனர் அபிஷேக் கோயல் தலைமையிலான போலீசார், ஜாலஹள்ளி அருகே அய்யப்பா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய ஆதரவாளரான மெஹதி மஸ்ரூர் பிஸ்வாசை கைது செய்தார்கள்.
5 நாட்கள் போலீஸ் காவல்
மெஹதியிடம் இருந்து மடிக்கணினி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
                                                                                             மேலும், . . .  .

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் விவரங்களை தேவையில்லாமல் வெளியிடக்கூடாது போலீஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, டிசம்பர், 15-12-2014,
குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் விவரங்களை தேவையில்லாமல் போலீஸ் அதிகாரிகள் வெளியிடக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறுவன் கடத்தல்
சென்னை அண்ணாநகரை சேர்ந்த பள்ளி மாணவன் கடந்த 2010-ம் ஆண்டு கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டான். இந்த மாணவனின் தந்தை மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பதால், அவரிடம் ரூ.1 கோடி தந்தால்தான் மகனை உயிருடன் விடுவோம் என்று கடத்தல் கும்பல் மிரட்டியது. இதுகுறித்து அந்த மாணவனின் தந்தை ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தல் கும்பலை வலை வீசி தேடினார்கள்.
இதற்கிடையில், அந்த தொழிலதிபர், ரூ.1 கோடியை கடத்தல் கும்பலிடம் கொடுத்து, தன் மகனை மீட்டார். இதன் பின்னர் 2 நாட்களுக்கு பின்னர் மாணவனை கடத்திய பிரபு, விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகாரிக்கு சம்மன்
தற்போது இந்த வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
                                                                                                   மேலும், . . . . 

No comments:

Post a Comment