Friday 26 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (27-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

காஷ்மீர் அரசியலில் அதிரடி திருப்பம் உமர் அப்துல்லா கட்சி திடீர் ஆதரவு மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கிறது
காஷ்மீர் அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கு உமர் அப்துல்லா கட்சியின் ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கிறது.
ஸ்ரீநகர், டிசம்பர், 27-12-2014,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பா.ஜனதா முயற்சி
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் செய்த பிரசாரங்களை ஒதுக்கிவிட்டு, சில விஷயங்களில் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே அம்மாநிலத்தில் ஒரு கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பா.ஜனதா, தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. இதற்காக தேசிய மாநாட்டு கட்சிக்கு மத்தியில் ஒரு கேபினட் மந்திரி உள்பட பல சலுகைகளை வழங்குவதாகவும் தகவல் கசிந்தது.
ஆனால் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் உமர் அப்துல்லா இந்த தகவல் களை திட்டவட்டமாக மறுத்தார்.
                                                                                                  மேலும், . . . .

பாகிஸ்தானில் 134 பள்ளிக்குழந்தைகள் பலிக்கு காரணமான முக்கிய சதிகாரன் சுட்டுக்கொலை ராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்

பெஷாவர், டிசம்பர், 27-12-2014,
பாகிஸ்தானில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 134 பள்ளிக்குழந்தைகள் பலியான சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சதிகாரன், ராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கி சண்டையின் போது பலி ஆனான்.
குழந்தைகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்திற்குள் கடந்த 16-ந் தேதி தெரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் புகுந்து 134 குழந்தைகள் உள்பட 150 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டையை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
                                                                                                      மேலும், . . .  . . 

தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களுக்கான செலவை மத்திய அரசு உடனே தரவேண்டும் நிதி மந்திரிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை, டிசம்பர், 27-12-2014,
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களுக்கான செலவு தொகையை மத்திய அரசு உடனே தரவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
நம்பிக்கை வளர்ச்சி
டெல்லியில் மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடந்த அனைத்து மாநில நிதிமந்திரிகள் கூட்டத்தில், நிதித்துறை இலாகாவை கவனிக்கும் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
மத்தியில் இந்த அரசு நிர்வாகப் பொறுப்புக்கு வந்தபோது, அதிக பண வீக்கத்துடனும், குறைந்த வளர்ச்சியுடனும் கூடிய பலவீனமான பொருளாதார சூழ்நிலை எழுந்தது. ஆனால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிறிது சிறிதாக நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு இந்த புதிய அரசு செயல்பட்டதை பாராட்டுகிறோம். பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தியதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை இந்த அரசு கவர்ந்துள்ளது.
நிதிப்பழு
அனைவருக்கும் வீடு, நகர்ப்புற உள்கட்டமைப்பு, நகர்ப்புற தூய்மை, ஸ்மார்ட் நகரங்கள் (நவீன நகரங்கள்) அமைத்தல் போன்ற நகர்ப்புற வளர்ச்சிக்காக அதிக அளவில் செலவிடுவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. நகர்ப்புற புதுப்பிப்புத் திட்டத்தின் முதல் பகுதியை வெற்றிகரமாக அமல்படுத்திய பிறகு இரண்டாம் கட்ட திட்டத்தை மாநிலங்கள் எதிர்பார்த்தபடி உள்ளன.
முதல் பாகத்தில் நிலுவையில் உள்ள 10 சதவீத தொகை இன்னும் மத்திய அரசால் தரப்படவில்லை என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
                                                                                                                       மேலும், . . .  .

சுனாமி தாக்கி 10 ஆண்டுகள் நிறைவு: ஆழி பேரலையில் உறவுகளை இழந்தவர்கள், கடலில் பால் ஊற்றி உருக்கம் பேரன், பேத்தியை பறிகொடுத்த பெண் கதறல்




சென்னை, டிசம்பர், 27-12-2014,
சுனாமி தாக்கி 10 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. பேரலையில் சிக்கி உறவுகளை இழந்தவர்கள் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பேரன், பேத்தியை பறிகொடுத்த பெண் ஒருவர் கதறி அழுதார்.
கருப்பு நாளாக்கிய சுனாமி
2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி தமிழக கடலோர மாவட்ட மக்களுக்கு ஒரு கருப்புநாளாகவே விடிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமத்ரா தீவில் உருவான சுனாமி பேரலைகளால் தமிழக கடலோர மாவட்டங்களும் சின்னாபின்னமாயின. ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்தனர். உறவுகளை கண் முன்னே பறி கொடுத்தவர்களும் மனதளவில் உருக்குலைந்து போனார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டாலும், அந்த சோக வடுவை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
மெரினா கடற்கரை முதல் எண்ணூர் வரை வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சுனாமிக்கு இரையாயினர். பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம் பகுதியில் மட்டும் 54 பேர் ஆழி பேரலையின் தாக்குதலுக்கு ஆளாகி இன்னுயிரை இழந்தனர்.
அஞ்சலி
அவர்களின் நினைவாக பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று அமைதி ஊர்வலம் நடந்தது.
                                                                                           மேலும், . . . 

No comments:

Post a Comment