Wednesday 17 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (18-12-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (18-12-2014) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

பாகிஸ்தானில் 132 குழந்தைகள் சுட்டுக்கொலை எதிரொலி மத்திய அரசின் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு தமிழக போலீசார் நடவடிக்கை

பாகிஸ்தானில் 132 குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டதன் எதி ரொலியாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
புதுடெல்லி, டிசம்பர், 18-12-2014,
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் நேற்று முன்தினம் தலீபான் தீவிரவாதிகள் புகுந்து 132 குழந்தைகளை ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றனர்.
இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு நாடுகளும் கண்டித்து உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து இருக்கிறார்.
தீவிரவாதிகள் தாக்கும் ஆபத்து
பாகிஸ்தானை போன்று இந்தியாவிலும் கல்வி நிறுவனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், டெல்லியில் வருகிற ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
எனவே இந்த சூழ்நிலையில் சிமி, லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள உளவுத்துறை, மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா சிறையில் இருந்து சமீபத்தில் சில தீவிரவாதிகள் தப்பிச் சென்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
மத்திய அரசு உத்தரவு
இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
                                                                                              மேலும், . .  . .  .

கற்பழிப்பு முயற்சியில் மாணவி கொலை 10-ம் வகுப்பு மாணவன் கைது பரபரப்பு வாக்குமூலம்


குடியாத்தம், டிசம்பர், 18-12-2014,
கே.வி.குப்பம் அருகே கற்பழிப்பு முயற்சியில் 6-ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
மாணவி கொலை
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவரது இளைய மகள் கிருத்திகா (வயது 11). இவர் மாச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ந் தேதி மதியம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் இரவு வரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
மறுநாள் காலையில் காங்குப்பம் அருகே உள்ள மாந்தோப்பில் மாணவியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகள் அவிழ்ந்த நிலையிலும் பிணமாக கிடந்தாள்.
                                                                                               மேலும், . .  . .

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுத்தக் கூடாது மத்திய அரசுக்கு, கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, டிசம்பர், 18-12-2014,
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எவ்வித பாதகமும் ஏற்படுத்த முயற்சிக்க கூடாது என்று மத்திய அரசை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
மகளிர் சுய உதவிக்குழுக்கள்
தி.மு.க. ஆட்சியிலே தான் மகளிர் சமூக-பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், ஜனநாயக ரீதியான அதிகாரங்களை பெறவும் முன்னுரிமை தந்து, பெண்களுக்கு சொத்துரிமை, உள்ளாட்சித் தேர்தல்களில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, அரசுப்பணிகளில் 30 சதவிகித ஒதுக்கீடு, பல்வேறு திருமண உதவித்திட்டங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், மகப்பேறு நிதி உதவித்திட்டம், இலவசப் பட்டப்படிப்புத்திட்டம் என்பன போன்ற பல்வேறு திட்டங்களைத் தொடங்கி, அவர்கள் வாழ்விலே ஒளியேற்றிடுவதற்கான முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
அந்த வரிசையில் கிராமப் புற ஏழையெளிய பெண்களை சமூக, பொருளாதார நிலைகளில் உயர்த்திடும் நோக்கில் பன்னாட்டு வேளாண் வளர்ச்சி நிதி உதவியுடன் தமிழ்நாடு
                                                                                                    மேலும், .  . . . . 

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து பற்றிய சர்ச்சை: பாராளுமன்றத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு வெங்கையா நாயுடுவுடன் கடும் வாக்குவாதம்

புதுடெல்லி, டிசம்பர், 18-12-2014,
கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்படுவது பற்றி மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுடன் எதிர்க்கட்சிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விடுமுறை ரத்தா?
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான 25-ந் தேதி ‘நல்லாட்சி தினமாக’ கொண்டாடப்படுகிறது. அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாளாகும்.
இருப்பினும், அன்று கல்வி நிறுவனங்களை திறந்து வைத்து, நிகழ்ச்சிகள் நடத்துமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கேள்வி
நேற்று பாராளுமன்றம் கூடியவுடன், காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் இப்பிரச்சினையை எழுப்பினார். அவர் பேசியதாவது:-
                                                                                                                மேலும், . .  . .

No comments:

Post a Comment