Wednesday 31 December 2014

இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (01-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

2014 முடிந்து 2015 பிறந்தது: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் மெரினாவில் பலூன்களை பறக்கவிட்டு உற்சாகம்


சென்னை, ஜனவரி, 01-01-2015,
2014-ம் ஆண்டு முடிந்து 2015-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைகள் நடந்தன.
2015 பிறந்தது
2014-ம் ஆண்டு இனிதாக விடைபெற்று, 2015-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது.
சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் நேற்று இரவு 8 மணி முதலே மக்கள் திரளாக கூடத்தொடங்கினர். ஏராளமான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர். நேரம் செல்ல, செல்ல மெரினாவில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டது. நள்ளிரவு சரியாக 12 மணிக்கு அவர்கள் வண்ண பலூன்களை பறக்கவிட்டும், வெடி வெடித்தும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
ஓட்டல்களில் கேளிக்கை
சென்னையில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் கேளிக்கை நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணிக்கு தொடங்கிய நடனம் விடிய, விடிய நடந்தது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் அவர்கள் கேக் வெட்டி, ஹேப்பி நியூ இயர் என்று கோரசாக குரல் எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல நட்சத்திர ஓட்டல்களில் நடந்த நிகழ்ச்சிகளில் தம்பதிகளாகவும், காதல் ஜோடிகளாகவும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி களித்தனர்.
தேவாலயம், கோவில்களில்
புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
                                                                                                      மேலும், . . . .  .

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் சாவு: இந்திய படைகளின் பதிலடிக்கு 4 பாகிஸ்தான் சிப்பாய்கள் பலி வெள்ளைக்கொடியை ஏந்தி உயிர் தப்பிய எதிரிகள்

ஜம்மு, ஜனவரி, 01-01-2015,
பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் பலியானதற்கு பதிலடியாக இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக்கொடி ஏந்தியதால், இந்தியப்படை தாக்குதலை நிறுத்தியது.
இந்திய வீரர் பலி
சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் படைகள் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரண்டாவது நாளாக, சம்பா மாவட்டம் சச்டெகார் என்ற இடத்தில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த மீறலில் ஈடுபட்டனர்.
ரோந்து சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு இந்திய வீரர் பலியானார்.
பதிலடி
இதற்கு எல்லை பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி கொடுத்தனர். அவர்கள் நடத்திய கடுமையான எதிர் தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள்.
                                                                                                    மேலும், . . .  .

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு பஸ் தொழிலாளர் போராட்டம் வாபஸ் உடனடியாக பணிக்கு திரும்பினர்

அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து பஸ் தொழிலாளர் போராட்டம் வாபஸ் ஆனது.
சென்னை, ஜனவரி, 01-01-2015,
ஊதிய உயர்வு உட்பட 22 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 28-ந்தேதியில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை தவிர மற்ற 11 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.
அமைச்சருடன் பேச்சு
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் பெருமளவில் சிரமம் ஏற்பட்டது. அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்தநிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று காலையில் தலைமைச்செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
                                                                                     மேலும், . . . .  .

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து அல்ல: விமானம், கடலில் எப்படி விழுந்தது என்பது பற்றி வெளியாகும் தகவல்கள் உயிர் காப்பு சட்டையுடன் உடல் மீட்கப்பட்டதால் புதிய கோணத்தில் விசாரணை

ஜகார்த்தா, ஜனவரி, 01-01-2015,
162 பேருடன் நடுவானில் மாயமான விமானம் கடலில் விழுந்தது எப்படி என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கண் இமைக்கும் நேரத்தில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகவில்லை. உயிர் காப்பு சட்டையுடன் உடல் மீட்கப்பட்டதால் புதிய கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
விமானம் மாயம்
இந்தோனேஷியாவில் உள்ள சுரபவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி 162 பேருடன் கடந்த 28-ந் தேதி புறப்பட்டு சென்ற ஏர் ஆசியா ‘ஏ320-200’ ஏர் பஸ் விமானம், நடுவானில் திடீரென மாயமானது. புறப்பட்டுச் சென்ற 42 நிமிடங்களில் இந்த விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்த பணியில், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளைச் சேர்ந்த 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.
விபத்து உறுதியானது
இந்த நிலையில், இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் (கரிமட்டா ஜலசந்தி பகுதியில்) விமானத்தின் பாகங்களும், சில மனித உடல்களும் மிதப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த விமானத்தின் பாகங்கள், மாயமான ஏர் ஆசியா விமானத்தின் பாகங்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டன. எனவே அந்த விமானம், கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதும் உறுதியானது. இது தொடர்பான காட்சிகள் டெலிவிஷன் சானல்களில் ஒளிபரப்பாகின. அவற்றைக் கண்டபோது, விபத்துக்குள்ளான விமானத்தில் பலியானவர்களின் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அழுதனர். ஒருவரை ஒருவர் தேற்ற முடியாமல் தவித்தனர்.
கடலில் இருந்து 40 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
                                                                                                            மேலும், . 

No comments:

Post a Comment