Thursday 1 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (02-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (02-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

4 பேர் சாவு; 170 பேர் காயம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்தில் சிக்கியவர்கள்

சென்னை, ஜனவரி, 02-01-2015,
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த 83 சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர். 170 பேர் காயமடைந்தனர்.
பைக் ரேஸ்
புத்தாண்டு பிறந்ததையொட்டி, இரவு முழுவதும் சென்னை மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம், தியாகராயநகர், மைலாப்பூர், கீழ்ப்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் ரேஸ்களில் பெரும்பாலானோர் ஈடுபட்டனர்.
ஆனால் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போலீசார் இதனை தடுக்கவோ, தட்டிக்கேட்கவோ இல்லை. ரோந்து செல்லும் போலீசாரும் பைக் ரேஸ்களை கண்டும் காணாமல் சென்றனர்.
170 பேர் காயம்
சென்னையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிமுதல் நேற்று காலை 6 மணி வரை நடந்த பைக் ரேஸ்களில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கீழே விழுதல், இன்னொரு வாகனத்தில் மோதியது, பாதசாரிகள் மீது மோதியது உள்பட 83 விபத்துகளில் சிக்கி 170 பேர் காயமடைந்தனர்.
இதில் 57 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், 56 பேர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையிலும், 37 பேர் அரசு ராயப்பேட்டை மருத்துவமனையிலும், 20 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காயமடைந்த 170 பேரில் 14 பேர் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 5 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தடை செய்ய வேண்டும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-
                                                                                                         மேலும், . . . . 

இந்திய எல்லையில் 13 முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதல் இந்தியா கடும் எச்சரிக்கை

புதுடெல்லி, ஜனவரி, 02-01-2015,
இந்திய எல்லையில் 13 முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் மீறல்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. என்றாலும் அந்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்தபடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு வசதியாக பல சமயங்களில் தாக்குதல் நடத்துகிறது.
                                                                                                            மேலும், . . .  .

பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர என்ன திட்டம் உள்ளது? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜனவரி, 02-01-2015,
பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர அரசு என்னென்ன திட்டங்களை வைத்துள்ளது என்பது குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நிதி நிலைமை
தமிழ்நாட்டில் உள்ள இரு உர ஆலைகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து நாப்தா வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், உண்மையில், தமிழகத்தின் நிதி நிலைமை முதல்-அமைச்சர் குறிப்பிட்டதை விட பல மடங்கு மோசமாக இருப்பதை உணர முடிகிறது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், ரூ.289 கோடி உபரி நிதி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் சொந்த வரி வருவாய் ரூ.91,835 கோடியாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் மாநிலத்தின் வரி வருவாய் ரூ. 45,917.5 கோடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட ரூ.8861.5 கோடி குறைவாக ரூ.37,056 கோடி மட்டுமே தமிழக அரசு வருவாய் ஈட்டியிருக்கிறது.
கவலை அளிக்கிறது
அதேபோல், வணிக வரி வசூல் 23.35 சதவீதம் அதிகரிப்பதற்கு பதிலாக 1.48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.
                                                                                                        மேலும், . . . . 

கனிமொழி கொந்தளிப்பால் தத்தளிக்கிறார் கருணாநிதி

சென்னை, ஜனவரி, 02-01-2015,
கட்சியில் தன்னை முழுமையாக ஓரங்கட்ட முயற்சிகள் நடப்பதாகவும், அதற்காகவே, தன்னை மாணவர் அணி செயலர் பொறுப்பில் நியமிக்க, தலைமையில் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் தி.மு.க., உட்கட்சித் தேர்தல், பரபரப்போடும், விறுவிறுப்போடும் கடந்த ஓராண்டாக நடந்து முடிந்து, மாவட்ட செயலர்கள் தேர்வும், முடிவுறும் நிலையை எட்டி இருக்கிறது. அடுத்த கட்டமாக, மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டுமே நடக்க வேண்டி உள்ளது. வரும் 9ம் தேதி, கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டிருப்பதால், முன்னதாக, மாநில நிர்வாகிகள் தேர்வை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
                                                                                                                   மேலும், . . .  . .

No comments:

Post a Comment