Saturday 24 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் ஒபாமா இன்று டெல்லி வருகை பிரதமர் மோடியை பிற்பகலில் சந்தித்து பேசுகிறார்

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஒபாமா, இன்று காலை டெல்லி வந்து சேருகிறார். பிற்பகலில் பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார்.
புதுடெல்லி, ஜனவரி, 25-01-2015
குடியரசு தின விழா நாளை (திங்கட்கிழமை) மிகுந்த உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்படுகிறது.
சிறப்பு விருந்தினர் ஒபாமா
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவருடன் மனைவி மிச்செல், உயர் அதிகாரிகள் குழுவினரும் விழாவில் பங்கேற்கிறார்கள்.
இந்திய குடியரசு தின விழாவில், அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. எனவே வரலாறு காணாத வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று வருகிறார்
குடியரசு தின விழாவில் கலந்துகொள்வதற்காக, 3 நாள் சுற்றுப்பயணமாக ஒபாமா, அதிநவீன வசதிகள் கொண்ட ‘ஏர்போர்ஸ்-1’ விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு டெல்லி வந்து சேருகிறார். இந்திய நேரப்படி நேற்று மாலை அவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார்.
டெல்லியில் பாலம் என்ற இடத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ஒபாமாவின் விமானம் தரை இறங்குகிறது. அங்கு அவரை மத்திய மந்திரி பியூஷ் கோயல் வரவேற்கிறார்.
                                                                                                     மேலும், . . . . 
கிருஷ்ணகிரி அருகே முகமூடி கொள்ளையர் அட்டகாசம் வங்கி லாக்கரை உடைத்து ரூ.12 கோடி நகைகள் கொள்ளை வடமாநில கும்பல் கைவரிசையா?


கிருஷ்ணகிரி, ஜனவரி, 25-01-2015
கிருஷ்ணகிரி அருகே வங்கிக்குள் முகமூடி கும்பல் புகுந்து லாக்கரை உடைத்து ரூ.12 கோடி மதிப்புள்ள 6,033 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. அவர்கள் வடமாநில கொள்ளையர்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேங்க் ஆப் பரோடா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திர மாநில எல்லையையொட்டி குந்தாரப்பள்ளியை அடுத்து ராமாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், தேசியமயமாக்கப்பட்ட ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியின் குந்தாரப்பள்ளி கிளை இயங்கி வருகிறது. 30 வருடங்கள் பழமையான இந்த வங்கியில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 52 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக உள்ளார்கள்.
இந்த சுற்றுவட்டார கிராமங்களுக்கு இது ஒன்று தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கி. இந்த வங்கியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார்கள். அந்த நகைகள் 3 பாதுகாப்பு பெட்டகங்களில் (லாக்கர்) பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. வங்கியின் மேலாளராக ஆந்திர மாநிலம் கோதாவரியை சேர்ந்த உதயபாஸ்கர் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
நகைகள் கொள்ளை
நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல பணி முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வங்கியின் மேலாளர் உதயபாஸ்கர் வங்கி கதவை திறந்தார். அப்போது வங்கிக்குள் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. மேலும் ஒரு லாக்கர் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உதயபாஸ்கர் இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
                                                                                                         மேலும், . . . . 

தாம்பரம் பைபாஸ் சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி 14 பேர் காயம்


தாம்பரம், ஜனவரி, 25-01-2015
தாம்பரம் பைபாஸ் சாலையில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். 14 பேர் காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் பிரேக் பிடித்தபோது விபத்து நேர்ந்தது.
அரசு பஸ்
சென்னை கோயம்பேட்டில் இருந்து சேலத்திற்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று காலை 10.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ரங்கநாதன் (வயது 50) ஓட்டினார். கண்டக்டர் ஜெய்சங்கர்(45) மற்றும் 20 பயணிகள் பஸ்சில் இருந்தனர். தாம்பரம் அருகே திருநீர்மலை பகுதியில் பஸ் வரும்போது லேசாக மழை தூறியது.
அப்போது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த டிரைவர், பஸ்சை வலது பக்கமாக திருப்ப முயன்றார்.
சாலையோரம் கவிழ்ந்தது
ஆனால் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பஸ் இடதுபுறமாக சாலையின் ஓரம் கவிழ்ந்தது.
                                                                                                        மேலும், . .  . .

ஆடிட்டர் குருமூர்த்தியின் சவாலை ஏற்கிறேன் ‘குற்றத்தை நிரூபித்துக் காட்டினால், அரசியலை விட்டே விலக தயார்’ தயாநிதி மாறன் அறிக்கை

சென்னை, ஜனவரி, 25-01-2015,
ஆடிட்டர் குருமூர்த்தியின் சவாலை ஏற்க தயார் என்றும், குற்றத்தை நிரூபித்துக் காட்டினால், தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்தியமந்திரி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முறிந்த கேள்வி அம்பு
என் மீது கூறப்பட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்கு தெளிவான விளக்கம் தந்துள்ளேன்.
                                                                                        மேலும், . . . . 

No comments:

Post a Comment