Monday 5 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (05-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (05-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

குடியரசு தினவிழாவையொட்டி நாசவேலையில் ஈடுபட திட்டம் விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதி
சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு

குடியரசு தின விழாவையொட்டி, விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருப்பதால், சென்னை உள்பட நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி, ஜனவரி, 05-01-2015,
வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது.
ஒபாமா இந்தியா வருகிறார்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொள்கிறார். இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
குடியரசு தின விழாவில் ஒபாமா கலந்துகொள்வதால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீவிரவாதிகள் ஏதேனும் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று புலனாய்வு துறையினர் கருதுகிறார்கள்.
பாக்.ராணுவம் தாக்குதல்
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் இருந்து எல்லைப்பகுதி வழியாக தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாக பாகிஸ்தான் ராணுவம், எல்லைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் துப்பாக்கியாலும், சிறிய ரக பீரங்கிகளாலும் சுட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
                                                                                                                        மேலும், . . . . 

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை, ஜனவரி, 05-01-2015,
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தி.மு.க. பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உள்கட்சி தேர்தல்
கடந்த 1½ மாதங்களாக நடந்து வந்த தி.மு.க. உள்கட்சி தேர்தல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரையில் பொதுக்குழு, செயற்குழு, 60 மாவட்ட செயலாளர்கள், நகர, வட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு 9-ந் தேதி நடக்கும் பொதுக்குழுவில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. இதற்காக 7-ந் தேதி போட்டியிட விரும்புகிறவர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்று ஏற்கனவே தி.மு.க. தலைமை கூறியுள்ளது. இந்த முறை கட்சியின் மாநில பொறுப்புகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
ராஜினாமா வதந்தியால் பரபரப்பு
இதற்கிடையே தி.மு.க. பொருளாளர் பதவியில் இருந்து மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்து விட்டதாக நேற்று காலை முதல் தகவல் பரவியது. இதனால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீடு முன்பு மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் தேவஜவஹர், தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கநாதன், நடிகர் வாகை சந்திரசேகர் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்தாரா? என்பது குறித்து உறுதியான தகவல் தெரியாததால் தொண்டர்கள் பெரிதும் தவிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.
                                                                                                                          மேலும், . .  . . 

சென்னை பள்ளிக்கரணையில் பயங்கரம் பாட்டி-பேத்தியை கொன்று 25 பவுன் நகை கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு

ஆலந்தூர், ஜனவரி, 05-01-2015,
பாட்டி-பேத்தியை கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேத்தியுடன் வசித்தார்
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை வி.ஜி.பி. சாந்தி நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி(வயது 83). இவரது சொந்த ஊர் மாயவரம். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள். ஒரு மகன் சிறு வயதிலேயே காணாமல் போய்விட்டார். மற்றொரு மகன் குணசேகரன், காலமாகிவிட்டார்.
முதல் மகள் புஷ்பா நங்கநல்லூரிலும், 2-வது மகள் ஜெயலட்சுமி மும்பையிலும், 3-வது மகள் மீனாட்சி மேற்கு மாம்பலத்திலும் வசிக்கிறார்கள். குணசேகரனின் மகள் அன்னபூரணி(36). இவருக்கு திருமணமாகி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.
ராஜலட்சுமி மட்டும் தனியாக இருப்பதால் தனது பேத்தி அன்னபூரணியுடன் பள்ளிக்கரணை வீட்டில் ஒன்றாக வசித்து வந்தார். அன்னபூரணி, கீழ்கட்டளையில் உள்ள ஒரு கார் ஷோரூமில் வேலை செய்து வந்தார்.
பின்பக்க கதவு உடைப்பு
கடந்த 1-ந் தேதி மீனாட்சி, தனது தாய் ராஜலட்சுமியுடன் பேசி உள்ளார்.
                                                                                                                    மேலும், . . .  .

இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி ராஜபக்சே வெற்றி பெறுவாரா?

கொழும்பு, ஜனவரி, 05-01-2015,
இலங்கை அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால், இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் சட்டத்தில் மாற்றம்
இலங்கையில் கடந்த 2005-ம் ஆண்டில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்த அதிபர் ராஜபக்சே, 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான இறுதி கட்ட போரில் வெற்றி பெற்றதன் மூலம், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தினார். அதன்படி 2010-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் பலத்த எதிர்ப்பு எதுவுமின்றி வெற்றி பெற்று 2-வது முறையாக அதிபரானார்.
2-வது முறையாக வெற்றி பெற்றதும், மீண்டும் தேர்தலில் போட்டியிட வசதியாக அரசியல் சட்டத்தை திருத்தினார். மேலும் அனைத்து அதிகாரங்களும் அதிபரிடமே இருக்கும் வகையில் அரசியல் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினார்.
மைத்ரிபால சிறிசேனா
ராஜபக்சேவின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஆளும் கூட்டணியிலேயே அதிர்வலைகளை ஏற்படுத்தின.
                                                                                                                   மேலும், . . .  .

No comments:

Post a Comment