Monday 26 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (27-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

21 குண்டுகள் முழங்க பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றினார் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம் கண்கவர் அணிவகுப்பை ஒபாமா, மோடி பார்வையிட்டனர்

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பை பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகியோர் பார்வையிட்டனர்.
புதுடெல்லி, ஜனவரி, 27-01-2015,
நாட்டின் 66-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பிரதமர் அஞ்சலி
வழக்கம்போல, டெல்லி ராஜபாதையில், பிரமாண்ட குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்புக்கு வரும் வழியில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை 9.45 மணிக்கு இந்தியா கேட்டில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு வந்தார்.
வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் மற்றும் முப்படை தளபதிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், மோடியும், மற்றவர்களும் ராஜபாதைக்கு வந்தனர். அங்கு வந்த துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை பிரதமர் மோடி வரவேற்றார்.
                                                                                                                 மேலும், . . . . .

சென்னையில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார்

சென்னை, ஜனவரி, 27-01-2015,
இந்தியாவின் 66-வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் கே.ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார்.
சென்னையில் குடியரசு தின விழா
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதற்காக, காந்தி சிலை மூவர்ண கொடிபோன்று மலர் களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சருக்கு வரவேற்பு
விழா நடைபெற்ற இடத்திற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காலை 7.52 மணிக்கு காரில் வந்தார். அவரது காருக்கு முன்பும், பின்பும் 15 போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். காரில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காமராஜர் சாலையில் இருபுறமும் குழுமியிருந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர், விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
                                                                                                 மேலும், . . . . .

வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி உறுதி அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சிகள் களத்தில் நிற்கின்றன

சென்னை, ஜனவரி, 27-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் களத்தில் நிற்பதால், 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. வேட்புமனு தாக்கலும் இன்றுடன் முடிவடைகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 13-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி என்பதால், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தேர்தலில், அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக எஸ்.வளர்மதி நிறுத்தப்பட்டுள்ளார். ஆளும் கட்சி என்பதால் வெற்றி பெறும் முனைப்பில், 27 அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பிரசாரம் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
போட்டி யாருக்கு?
தி.மு.க. சார்பில் ஆனந்த் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
                                                                                                               மேலும், . . . . .

டெல்லி குடியரசுதின விழாவில் முகுந்த் வரதராஜனுக்கு ‘அசோக சக்ரா’ விருது மனைவி பெற்றுக்கொண்டார்

புதுடெல்லி, ஜனவரி, 27-01-2015,
டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் சென்னை ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனுக்கு வழங்கப்பட்ட அசோக சக்ரா விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.
தீவிரவாத தாக்குதல்
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் முகுந்த் வரதராஜன். ராணுவத்தின் ராஷ்டிரீய ரைபிள் படையின் (22-வது ராஜ்புத் பிரிவு) 44-வது பட்டாலியனில் மேஜராக பதவி வகித்து வந்த முகுந்த் காஷ்மீரில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், திடீரென ஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் நுழைந்தனர். இந்த தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ராணுவத்தை திறம்பட வழிநடத்திய முகுந்த் வரதராஜன், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் 3 பயங்கர தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம்
இதைப்போல ராஷ்டிரீய ரைபிள் படையில் அங்கம் வகித்து வந்த நாயக் நீரஜ் குமார், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட குர்தாஜி கிராமத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 24-ந் தேதி தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது காயமடைந்த சக வீரர் ஒருவரை துணிச்சலுடன் காப்பாற்றிய இவர், ஒரு தீவிரவாதியையும் சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் நினைவிழக்கும் வரை, பாதுகாப்பான பகுதிக்கு நகர மறுத்து விட்டார். கடைசி வரை தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்திய அவர் இறுதியில் வீரமரணத்தை தழுவினார்.
மனைவி பெற்றுக்கொண்டார்
இந்த இரு வீரர்களின் துணிச்சல் மிக்க தீரச்செயலை பாராட்டி, ராணுவத்தின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.
                                                                                                                        மேலும், . . . . . . 

No comments:

Post a Comment