Thursday 29 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (30-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

குடியரசு தின பதக்கம் பெற்ற மறுநாள் கொல்லப்பட்டவர் மனிதாபிமானத்தால் உயிர் இழந்த ராணுவ அதிகாரி காஷ்மீரில் நடந்த சம்பவம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள்


புதுடெல்லி, ஜனவரி, 30-01-2015,
குடியரசு தின பதக்கம் அறிவிக்கப்பட்ட மறுநாள் ராணுவ அதிகாரி ஒருவர் காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பலியான விதம் பற்றி நெஞ்சை உருக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ராணுவ அதிகாரி
வீர தீர செயலுக்காக குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட யுத் சேவா பதக்கம் பெற்றவர்களில் ராணுவ கர்னல் முனிந்திர நாத் ராயும் ஒருவர். அவர், மென்மையான இதயம் கொண்ட துணிச்சலான அதிகாரி என்று பெயர் பெற்றவர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளத்தால் தத்தளித்தபோது, துணிச்சலுடன் செயல்பட்டு, நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றினார். இதற்காகவே அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும், காஷ்மீரைச் சேர்ந்த சுமார் 50 ஆப்பிள் விவசாயிகளை சிம்லாவுக்கு அனுப்பி வைத்து, ஆப்பிள் விவசாயத்தின் லாப நுணுக்கங்களை கற்றுக் கொள்ள செய்தவர்.
குடும்பம்
இத்தகைய பின்புலம் கொண்ட கர்னல் முனிந்திர நாத் ராய்க்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டபோது, குடும்பத்தினரும், உறவினர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி, 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. மறுநாள், அதாவது 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் திரால் பகுதியில் அவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நெஞ்சை உருக்கும் தகவல்கள்
2 நாட்கள் கழிந்த நிலையில், அவர் சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து நெஞ்சை உருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவை வருமாறு:–
                                                                                                                     மேலும், . . . .

டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடபோவதில்லை கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்ப பா.ஜனதா முடிவு விவாதத்துக்கு வந்தால் 50 கேள்விக்கு பதில் தர தயார் என்கிறது ஆம் ஆத்மி


புதுடெல்லி, ஜனவரி, 30-01-2015,
டெல்லியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ள பா.ஜனதா, கெஜ்ரிவாலுக்கு தினமும் 5 கேள்விகள் எழுப்பப்போவதாக கூறி உள்ளது. விவாதத்துக்கு வந்தால் 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் என ஆம் ஆத்மி பதிலடி தந்துள்ளது.
தேர்தல் அறிக்கை கிடையாது
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர்களுடன் நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
                                                                                                                     மேலும், . . . .

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தகவல்

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவப்படை வீரர்கள் வர இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை, ஜனவரி, 30-01-2015,
தமிழக சட்டசபையில் காலியாக இருக்கும் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இறுதி வேட்பாளர் பட்டியல்
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
                                                                                                           மேலும், . . . . .

நெல்லையில் பயங்கரம் விவசாய சங்க தலைவர் வெட்டிக்கொலை தங்கை மகன் உள்பட 2 பேர் கைது


திருநெல்வேலி, ஜனவரி, 30-01-2015,
நெல்லையில், விவசாய சங்க தலைவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய தங்கை மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
விவசாய சங்க தலைவர்
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி அசோகா வீதி 2–வது தெருவைச் சேர்ந்தவர், அய்யாப்பிள்ளை என்ற கணேசன் (வயது 54). விவசாயி. இவர் பாளையங்கால் விவசாயிகள் சங்க தலைவராகவும், பகிர்மான குழு உறுப்பினராகவும் இருந்தார். சேவா பாரதி என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் சமூக சேவையும் செய்து வந்தார்.
முதியோர்களை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து உதவித்தொகை வாங்கி கொடுத்து உதவிகள் செய்தார்.
திருமணம் ஆகாத கணேசன், தன்னுடைய அண்ணன் முத்தையா வீட்டில் வசித்து வந்தார்.
                                                                                                  மேலும், . . . . .

No comments:

Post a Comment