Thursday 8 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (09-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (09-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இலங்கை அதிபர் தேர்தல் 1,16,146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஸ்ரீசேனா முன்னிலை ராஜபக்சே-சிறிசேனா வெற்றி யாருக்கு? இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குப்பதிவு இன்று பகலில் முடிவு தெரியும்

கொழும்பு, ஜனவரி, 09-01-2015,
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில், எதிர்க்கட்சி வேட்பாளர் ஸ்ரீசேனா ,1,16,146 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக அதிபர் ராஜபக்சே மீண்டும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி வேட்பாளராக ஸ்ரீசேனா களமிறங்கினார். , இலங்கை அதிபர் தேர்தல், மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இலங்கை தேர்தலில் 70 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் மக்கள் ஆர்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டளித்தனர். குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் வடமேற்கு பகுதிகளில், ஓட்டுப்பதிவு பரபரப்பாக நடைபெற்றது. இங்குள்ள புத்தாலம் கிராமத்தில், மொத்தம் உள்ள, 1,200 வாக்காளர்களில், ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணி நேரத்தில், 800 பேர் ஓட்டளித்து உள்ளனர். ஒரு சில பகுதிகளில், மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் வாயிலாக, மக்கள் மறக்காமல் ஓட்டளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஓட்டுகள் பதிவாயின.
இதன் பின்னர் இரவு ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.ஸ்ரீசேனாவின் சொந்த தொகுதியான பொலநறுவ மாவட்டத்தில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டதில், ஸ்ரீசேனா 9.480 ஓட்டுக்களும், ராஜபக்சே 4,309 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.மொனராகல மாவட்டத்தில் ராஜபக்சே 8377 ஓட்டுக்களும், ஸ்ரீசேனா 7058 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.காலி மாவட்டத்தில் ஸ்ரீசேனா 13,879 ஓட்டுக்களும், ராஜபக்சே 16,116 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.கோகாலை மாவட்டத்தில், ஸ்ரீசேனா 14,976 ஓட்டுக்களும், ராஜபக்சே 14,163 ஓட்டுக்களும் பெற்றனர்.யாழ்ப்பாணத்தில் ஸ்ரீசேனாவுக்கு 10,085 ஓட்டுக்களும், ராஜபக்சேவுக்கு 4,067 ஓட்டுக்களும் பெற்றனர்.
கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஸ்ரீசேனாவுக்கு ஆதரவாக 8,81,881 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. ராஜபக்சேவுக்கு ஆதரவாக,7,65,735ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஸ்ரீசேனா 52.82சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளார். ராஜபக்சே 45.86 சதவீத ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
ராஜபக்சே மீண்டும் போட்டி
இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அங்கு புதிய அதிபரை தேர்ந்து எடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது.
தற்போதைய அதிபர் ராஜபக்சேவின் (வயது 69) பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் இருந்த போதிலும், அவர் முன்கூட்டியே தேர்தலை நடத்த ஏற்பாடு செய்தார். மேலும் தான் 3-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் சட்டத்திலும் அவர் திருத்தம் செய்தார்.
மீண்டும் அதிபர் நாற்காலியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் சுதந்திரா மக்கள் கட்சியின் சார்பில் ராஜபக்சே களம் இறங்கினார்.
                                                                                                                             மேலும், . . . .

அவரிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை ‘‘ரஜினிகாந்தின் கவனத்தை ஈர்க்கவே உண்ணாவிரதம்’’ ‘லிங்கா’ வினியோகஸ்தர்கள் பேட்டி

சென்னை, ஜனவரி, 09-01-2015,
‘‘லிங்கா படத்துக்காக ரஜினிகாந்திடம் நாங்கள் நஷ்ட ஈடு கேட்கவில்லை. அவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவே உண்ணாவிரதம் இருக்கிறோம்’’ என்று வினியோகஸ்தர்கள் கூறினார்கள்.
பேட்டி
ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தை வாங்கிய திருச்சி-தஞ்சை வினியோகஸ்தர் சிங்காரவேலன், திருநெல்வேலி-கன்னியாகுமரி வினியோகஸ்தர் ரூபன், வட ஆற்காடு-தென் ஆற்காடு வினியோகஸ்தர் சாய், தியேட்டர் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் ஆகியோர் சென்னை ‘பிரஸ் கிளப்’பில் நேற்று காலை பேட்டி அளித்தார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
‘‘ரஜினிகாந்தும், கே.எஸ்.ரவிகுமாரும் சேர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், ‘லிங்கா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மாணவர்-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு உள்பட பல்வேறு காரணங்களால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. திருச்சி-தஞ்சையில் மட்டும் 55 தியேட்டர்களில் திரையிட்டோம். முதல்நாள் ரூ.ஒரு கோடியே 26 லட்சம் வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், ரூ.76 லட்சம் தான் வசூல் செய்தது.
அதனால், ‘லிங்கா’ படத்தை வாங்கியதில், எங்களுக்கு மொத்தம் ரூ.5½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை சரி செய்யும்படி, ஈராஸ் நிறுவனத்திடம் கேட்டோம்..
                                                                                                  மேலும், . . . . . 

வருமானவரி வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிப்பு 18 ஆண்டுகளாக நடந்த வழக்கு முடிவுக்கு வந்தது

சென்னை, ஜனவரி, 09-01-2015,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, வருமானவரித்துறை வழக்கில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.
வருமானவரி வழக்கு
வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோர் மீது வருமானவரித்துறையினர் சென்னை எழும்பூர் 1-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் 4 வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் கடந்த 1996-ம் ஆண்டு தொடரப்பட்டது. கடந்த 18 ஆண்டு காலமாக நடந்து வரும் இந்த வழக்கை விரைவாக முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் சமரச தீர்வு மனு ஒன்றை வருமானவரித்துறையிடம், ஜெயலலிதாவும், சசிகலா நடராஜனும் தாக்கல் செய்தனர். ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோரின் சமரச தீர்வு மனுக்கள் மீது வருமானவரித்துறையின் சமரசதீர்வு கமிட்டி விசாரணை நடத்தியது.
சமரச மனுக்கள் ஏற்பு
விசாரணையில் சமரச மனுக்களை, வருமானவரித்துறையின் கமிட்டி ஏற்றுக்கொண்டது. மேலும் வழக்கை சமரசமாக தீர்த்துக்கொள்ள 4 வழக்குகளிலும் சேர்த்து ரூ.1.99 கோடி செலுத்தவும், ஜெயலலிதா, சசிகலா நடராஜன் ஆகியோருக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டது.
                                                                                                                 மேலும், . . . . .

மாதவரத்தில் ரோட்டில் கிடந்த சூட்கேசில் ஆண் பிணம் கொலை செய்யப்பட்டவர் துறைமுக ஊழியரா என்று விசாரணை


செங்குன்றம், ஜனவரி, 09-01-2015,
மாதவரம் அருகே ரோட்டில் கிடந்த சூட்கேசில் ஆண் பிணம் இருந்தது. கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் சென்னை துறைமுக ஊழியரா? என்றும், அவரை கொலை செய்தது யார்? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சூட்கேசில் ஆண் பிணம்
மாதவரம் தணிகாசலம் நகர் கழிவுநீர் கால்வாய் ஓரம் நேற்று காலை சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை அப்பகுதியில் குப்பை அள்ள சென்ற துப்புரவு தொழிலாளர்கள் பார்த்தனர். சந்தேகம் ஏற்பட்டதால் மாதவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே மாதவரம் போலீஸ் உதவி கமிஷ்னர் சங்கரலிங்கம், துணை கமிஷ்னர் விமலா, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துறைமுக ஊழியரா?
பிணமாக கிடந்தவர் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்து இருந்தார்.
                                                                                                        மேலும், . . . . .

No comments:

Post a Comment