Thursday 22 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (23-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (23-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

உதவியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்த விவகாரம்: ‘எனக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலை குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்’ கருணாநிதியை சந்தித்த பின் தயாநிதிமாறன் பேட்டி

சென்னை, ஜனவரி, 23-01-2015,
உதவியாளர் உள்பட 3 பேரை சி.பி.ஐ. கைது செய்த விவகாரம் தொடர்பாக, எனக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சி வலை என்றும், நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் கூறினார்.
3 பேர் கைது
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தி.மு.க.வை சேர்ந்த தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தார். அப்போது, சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சட்ட விரோதமாக தொலைபேசி இணைப்பு கொடுத்துக் கொண்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும், ஏற்கனவே சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை 8 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தயாநிதிமாறனிடம் உதவியாளராக இருந்த கவுதமன், சன் டி.வி. ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய 3 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
கருணாநிதியுடன் சந்திப்பு
அதனைத் தொடர்ந்து, தயாநிதிமாறனும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை 8.50 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை தயாநிதிமாறன் சந்தித்து பேசினார். அவருடன் வக்கீல் சண்முகசுந்தரம் உடன் இருந்தார்.
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
                                                                                               மேலும், . . . . .

என் மீது மானநஷ்ட வழக்கு போடுவதாக கூறி, ஏன் போடவில்லை: ‘‘தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்’’ ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி

‘‘தயாநிதிமாறன் கூறுவது அப்பட்டமான பொய்’’ என்றும், என் மீது மானநஷ்ட வழக்கு போடுவதாக கூறி, ஏன் போடவில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, ஆடிட்டர் குருமூர்த்தி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சந்தோஷம்
எனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று தயாநிதிமாறன் சொன்னதை பற்றி நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால், 2007-ம் ஆண்டு தான் இந்த விசாரணை தொடங்கியது. குற்றச்சாட்டை சி.பி.ஐ. பதிவு செய்தது அப்போது. 323 ஐ.எஸ்.டி. இணைப்புகள் தயாநிதிமாறன் வீட்டில் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் பெயரில் பதுக்கப்பட்டு இருந்தது.
அதாவது, கம்ப்யூட்டரில் இல்லாத, யாருக்குமே தெரியாத, சில பேருக்கு மாத்திரம் தெரிந்த மாதிரி இந்த 323 இணைப்புகள் பதுக்கப்பட்டு, அதில் இருந்து பாதாள குழி தோண்டி கேபிள் மூலம் சன் டி.வி.யில் இணைத்தார்கள். இதுபற்றி விசாரித்த சி.பி.ஐ., இது உண்மை, இது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனுமதி தேவை என்று 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார்கள்.
தயாநிதிமாறன் செய்த தவறு
அப்போது யார் அதிகாரத்தில் இருந்தார்கள். அப்போது தயாநிதிமாறன் தி.மு.க.வில் இல்லை. அவர் 2007-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க.வை விட்டு விலகினார்.
                                                                                           மேலும், . . . . .

திமுக வேட்பாளர் ஆனந்த் சொத்து மதிப்பு ரூ.6.51கோடி

ஸ்ரீரங்கம், ஜனவரி, 23-01-2015,
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆனந்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.51 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள சொத்து விவரம்:
கையிருப்பு: வேட்பாளர் என். ஆனந்திடம் ரூ. 2 லட்சம், அவரது மனைவி ஏ. சௌமியாவிடம் ரூ. 1 லட்சம். மகள் ஏ. அக் சிதாவிடம் கையிருப்பு இல்லை.
வேட்பாளர் என். ஆனந்திடம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார், ரூ.20,000 மதிப்புள்ள யமஹா இரு சக்கர வாகனம். ஆனந்திடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டுப் பத்திரம்.
தங்க நகைகள் மதிப்பு: என். ஆனந்திடம் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள 100 கிராம், அவரது மனைவி சௌமியாவிடம் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 825 கிராம் தங்கம்,
                                                                                                           மேலும், . . . . 

ஒபாமாவின் மகள்கள் இந்தியா வரவில்லை பள்ளியில் விடுமுறை இல்லை

வாஷிங்டன், ஜனவரி, 23-01-2015,
பள்ளிக்கு விடுமுறை இல்லாததால், ஒபாமாவுடன் அவரது மகள்கள் இந்தியாவுக்கு வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாஷா, மலியா
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, 3 நாள் அரசு முறை பயணமாக 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார். இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அவர், அதன் பிறகு தாஜ்மகால் உள்பட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கிறார்.
வழக்கமாக ஒபாமாவின் வெளிநாட்டு பயணங்களின் போது அவருடன், மனைவி மிச்செல், மகள்கள் சாஷா (வயது 16), மலியா (13) ஆகியோரும் செல்வதுண்டு. கடந்த ஆண்டு மிச்செல் சீனாவுக்கு சென்ற போதும், அவருடன் மகள்களும் சென்றிருந்தனர்.
பள்ளிக்கே முன்னுரிமை
ஆனால் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது, அவருடன் மனைவி மிச்செல் மட்டுமே வருகிறார். அப்போது பள்ளிக்கு விடுமுறை இல்லாததால், சாஷாவும், மலியாவும் இந்தியாவுக்கு வரமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மகள்கள் இருவரும், தங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே பெற்றோருடன் வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புகிறார்கள் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
                                                                                                      மேலும், . . . .

No comments:

Post a Comment