Tuesday 20 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (21-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது 9 பயணிகள் உடல் நசுங்கி பலி பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம்

ஒகேனக்கல், ஜனவரி, 21-01-2015,
ஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது. இந்த கோர விபத்தில் 9 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் தர்மபுரி, ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக பன்னீர்செல்வம் என்பவர் இருந்தார்.
இந்த பஸ், தர்மபுரி பஸ் நிலையத்துக்கு 11.45 மணிக்கு வந்துவிட்டு ஒகேனக்கல்லை அடைவதற்கு முன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது.
மதியம் 1 மணியளவில் மலைப்பாதையில் உள்ள கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற வாகனத்தை டிரைவர் சிவக்குமார் முந்திச்செல்ல முயன்றார்.
பள்ளத்தில் உருண்டது
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் இடதுபுற தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
                                                                                                          மேலும், . . . . 

13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு இலங்கை புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு அளிக்க 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.
கொழும்பு, ஜனவரி, 21-01-2015,
கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர்.
13-வது திருத்தம்
அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்பட அனைத்து மாகாணங்களுக்கும் அதிகார பகிர்வு அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.
ஆனால், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்தவில்லை. மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை சுப்ரீம் கோர்ட்டு, 13-வது சட்ட திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், மாகாணங்களுக்கு இதுவரை அதிகார பகிர்வு கிடைக்கவில்லை.
ஆனால், 13-வது சட்ட திருத்தத்தை எழுத்திலும், செயலிலும் அமல்படுத்துமாறு இலங்கையை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
                                                                                                                      மேலும், . . . .

பூந்தமல்லியில் பயங்கரம் கோர்ட்டு வளாகத்தில் கைதி வெட்டிக்கொலை அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழியா? போலீசார் விசாரணை

பூந்தமல்லி, ஜனவரி, 21-01-2015,
பூந்தமல்லி கோர்ட்டு வளாகத்தில் நேற்று கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழியாக சம்பவம் நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொலை குற்றவாளி
சென்னை, நெசப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வரதன் என்ற வரதராஜன் (வயது 34). கடந்த 2010–ம் ஆண்டு பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் முருகன் என்பவரது மனைவியை கிண்டல் செய்தபோது தகராறு ஏற்பட்டது. அப்போது முருகன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 3–வது குற்றவாளியாக வரதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2–ல் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் சாட்சி சொல்ல வந்த கிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கும் வரதன் மீது உள்ளது. இந்த வழக்கும் பூந்தமல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கோர்ட்டில் ஆஜராக வந்த கைதி
இந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக வேலூர் சிறையில் இருந்து பூந்தமல்லி கோர்ட்டுக்கு வரதனை போலீசார் வேனில் அழைத்து வந்தனர்.
                                                                                                                 மேலும், . . . .

சென்னை கொளத்தூர் அருகே அடுத்தடுத்து3 மோட்டார் சைக்கிள்கள் மீது லாரி மோதியதில்4 பேர் பலி டிரைவர் குடிபோதையில் இருந்ததாக அதிர்ச்சி தகவல்

செங்குன்றம், ஜனவரி, 21-01-2015,
கொளத்தூர் அருகே அதிவேகமாக சென்ற லாரி அடுத்தடுத்து 3 மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அதிவேகமாக சென்ற லாரி
சென்னை பாடியிலிருந்து மணலி நோக்கி 200 அடி சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஒரு மினி லாரி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.
கொளத்தூர் அருகே உள்ள செந்தில் நகரில் அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பெண் பலி
அதே லாரி தொடர்ந்து தறிகெட்டு ஓடி 2–வதாக மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
                                                                                                         மேலும், . . . . .

No comments:

Post a Comment