Tuesday 6 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (07-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (07-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு: அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும் கர்நாடக ஐகோர்ட்டில் க.அன்பழகன் புதிய மனு

பெங்களூரு, ஜனவரி, 07-01-2015,
சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையில் இருந்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனிக்கோர்ட்டு தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் தனி நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தன்னை 3-வது நபராக சேர்த்து வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இதுபற்றி அரசு வக்கீல் மற்றும் எதிர்தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.
ஐகோர்ட்டில் புதிய மனு
இந்த நிலையில் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு சார்பில் ஆஜராகும் சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று கோரி கர்நாடக ஐகோர்ட்டில் க.அன்பழகன் சார்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
“சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
                                                                                                   மேலும், . . .  .

மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: சசிதரூர் மனைவி கொல்லப்பட்டதாக தகவல் கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

புதுடெல்லி, ஜனவரி, 07-01-2015,
காங்கிரஸ் எம்.பி. சசிதரூ ரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணத்தில் திடீர் திருப்பமாக டெல்லி போலீஸ் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியது.
சுனந்தா மரணம்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு மந்திரியாக இருந்தவர் சசிதரூர். காங்கிரசை சேர்ந்த இவர் தற்போது எம்.பி.யாக உள்ளார். இவர் கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான வர்த்தக பிரமுகர் சுனந்தா புஷ்கர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
சுனந்தா புஷ்கர் 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் உள்ள ‘லீலா பேலஸ்’ என்ற 5 நட்சத்திர ஓட்டலில் 345-ம் எண் அறையில் தங்கியிருந்தார். அப்போது அவர் அறையிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கொலை வழக்காக மாற்றம்
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு அவர் விஷம் காரணமாக இறந்ததாக முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்தது. இதன் அடிப்படையில் மர்ம மரணமாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
52 வயதான சுனந்தா இறந்து ஒருவருடத்துக்கு பின்னர் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
                                                                                                          மேலும், . . . . 

ராஜபக்சே -சிறிசேனா இடையே கடும் போட்டி இலங்கையில் நாளை அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இரவிலேயே தொடங்கும்

இலங்கை அதிபர் தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ராஜபக்சே - சிறிசேனா இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கொழும்பு, ஜனவரி, 07-01-2015,
இலங்கை அதிபராக கடந்த 2005-ம் ஆண்டு ராஜபக்சே பதவி ஏற்றார்.
2008-ம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் தொடுத்தார். 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
அந்த செல்வாக்கை பயன்படுத்தி, அதிபர் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார். 2010-ம் ஆண்டு நடைபெற்ற அத்தேர்தலில், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை வீழ்த்தி மீண்டும் அதிபர் ஆனார்.
மீண்டும் போட்டி
இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் இரண்டு தடவை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது தடவையாக பதவிக்கு வர விரும்பும் ராஜபக்சே, இந்த சட்டப்பிரிவை திருத்தினார். அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் அவரது நடவடிக்கைக்கு ஆளுங்கூட்டணியிலும் எதிர்ப்பு எழுந்தது. கூட்டணி கட்சிகளும், எம்.பி.க்களும் அடுத்தடுத்து விலகினர்.
அதை பொருட்படுத்தாமல், ராஜபக்சே, அதிபர் தேர்தலை மீண்டும் முன்கூட்டியே நடத்த தீர்மானித்தார். அதன்படி, நாளை (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது.
                                                                                                     மேலும், . . . . . 

காலதாமதம் இல்லாமல் நதி நீர் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை, ஜனவரி, 07-01-2015,
நதி நீர் இணைப்புத் திட்டத்தை காலதாமதம் இல்லாமல் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீர் பற்றாக்குறை
நதிகள் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் இரண்டாவது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதிலாக அவரது உரையை தமிழக பொதுப்பணித் துறையின் முதன்மைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகம் எப்போதுமே நீர் பற்றாக்குறை உள்ள மாநிலமாகவே இருக்கிறது. சென்னை உட்பட பல பகுதிகளில் பருவமழையை நம்பியுள்ளன. குடிநீருக்கும், நீர்ப்பாசனத்துக்கும் பக்கத்து மாநிலங்களை நம்பும் மாநிலமாகவே தமிழகம் இருக்கிறது.
தீபகற்ப நதிகள் இணைப்பு
இதனால்தான் தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும் என்றும் மேற்குப் பகுதியில் பாயும் ஆறுகள் கிழக்கு நோக்கி திசைதிருப்பப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநிலத்துக்குள் உள்ள ஆறுகளை இணைக்கும் நதிகளை இணைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
தீபகற்ப நதிகள் மேம்பாட்டுக் கூறுகளை அமல்படுத்தும்படி 1993-ம் ஆண்டிலேயே அப்போதய பிரதமரை ஜெயலலிதா வலியுறுத்தினார்.
                                                                                                                                  மேலும், . . . . 

No comments:

Post a Comment