Wednesday 14 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (15-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (15-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற பொங்கல் நாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும், இன்பமும் பெருகட்டும் ஜெயலலிதா வாழ்த்து

சென்னை, ஜனவரி, 15-01-2015,
அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற பொங்கல் நாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும், இன்பமும் பெருகட்டும் என்று ஜெயலலிதா வாழ்த்தியுள்ளார்.
பொங்கல் வாழ்த்து
அ.திமு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், தமிழர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                                                                                    மேலும், . . . . .

பெங்களூரு சென்ற போது கார்-வேன் மோதல்: தமிழக முதன்மை செயலாளர் சாந்தினி கபூர் விபத்தில் பலி உடன் சென்ற மேலும் 2 பேரும் சாவு



கிருஷ்ணகிரி, ஜனவரி, 15-01-2015,
பெங்களூரு சென்ற போது கார்-வேன் விபத்தில் சிக்கி தமிழக முதன்மை செயலாளர் சாந்தினி கபூர் பலியானார். காரில் உடன் சென்ற மேலும் 2 பேரும் இறந்தனர்.
தமிழக முதன்மை செயலாளர்
தமிழக அரசின் முதன்மை செயலாளராக (அரசின் சிறப்பு செயலாக்க திட்டங்கள்) இருந்தவர் சாந்தினி கபூர் (வயது 55). மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் நேற்று சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றார்.
அந்த காரில் சாந்தினி கபூருடன், அவரது தங்கை பெட்ரிசியா (45), தங்கையின் கணவர் ரிச்சர்ட் சிருஷ்டி (48), இவர்களின் மகள் ஆனா கிறிஸ்டினா (20) ஆகியோர் சென்றனர். காரை சென்னை அண்ணாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் (52) ஓட்டினார்.
                                                                                                                           மேலும், . . . .

2009-ம் ஆண்டு தேர்தலில் விதிமுறைகளை மீறிய வழக்கு: மத்திய மந்திரிக்கு 1 ஆண்டு ஜெயில் முக்தார் அப்பாஸ் நக்வி உடனடியாக ஜாமீனில் விடுதலை

2009-ம் ஆண்டு தேர்தலில் விதிமுறைகளை மீறிய வழக்கில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
ராம்பூர், ஜனவரி, 15-01-2015,
மோடி மந்திரி சபையில் பாராளுமன்ற விவகாரத்துறை ராஜாங்க மந்திரியாக இருப்பவர் முக்தார் அப்பாஸ் நக்வி.
இவர் கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
தடையை மீறிய குற்றச்சாட்டு
அப்போது, ராம்பூர் பா.ஜனதா தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, அவரது தலைமையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடை உத்தரவையும் மீறி, அங்குள்ள போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தனர்.
இதுதொடர்பாக, நக்வி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                                     மேலும், . . . . .

சென்னையில் போகி கொண்டாட்டம் கடுமையான புகை-பனி மூட்டத்தால் விமான போக்குவரத்து பாதிப்பு

ஆலந்தூர், ஜனவரி, 15-01-2015,
சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம் காரணமாகவும் நேற்று காலை கடுமையான புகை மற்றும் பனி மூட்டம் காரணமாகவும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போகி பண்டிகை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. நேற்றும் வழக்கம் போல் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
மேலும் நேற்று போகி பண்டிகை என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு பழைய பொருட்களை தீ வைத்து எரித்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் கடுமையான புகை மூட்டம் இருந்தது.
விமான போக்குவரத்து பாதிப்பு
கடுமையான புகை மற்றும் பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் தரை இறங்கவோ, பறந்து செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது.
                                                                                                         மேலும், . . . .

No comments:

Post a Comment