Friday 9 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (10-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (10-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி


தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் காரணமாக இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார்.
கொழும்பு, ஜனவரி, 10-01-2015,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடும் போட்டி
இந்த தேர்தலில் ஆளும் சுதந்திரா கட்சியின் சார்பில், அதிபராக இருந்து வந்த மகிந்தா ராஜபக்சே மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மைத்ரிபாலசிறிசேனா நிறுத்தப்பட்டார்.
இவர் ராஜபக்சேயின் அரசில் சுகாதார துறை மந்திரியாக இருந்தவர். ராஜபக்சேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு அவருக்கு எதிராக தேர்தல் களத்தில் குதித்தார். இவருக்கு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இவர்கள் தவிர மேலும் 17 வேட்பாளர்கள் போட்டியிட்ட போதிலும், சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
ராஜபக்சேபடுதோல்வி
நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 81.52 சதவீத வாக்குகள் பதிவாயின. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
                                                                                                  மேலும், . . . .

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி: ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ராஜபக்சே போல் சிறிசேனா செயல்படக்கூடாது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜனவரி, 10-01-2015,
இலங்கை தேர்தல் முடிவு; கருணாநிதி கருத்து
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முடிவடைந்த பிறகு, வெளியே வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம், இலங்கை அதிபர் தேர்தல் முடிவு குறித்து நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ராஜபக்சே மிகப்பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறாரே?.
பதில்:- அறிக்கை பின்னர் தருகிறேன். வெற்றி பெற்றவரும், தோல்வி அடைந்தவரும் கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களுக்கு யார் பொறுப்பு என்பதை எண்ணிப் பார்த்து இனிமேலாவது திருத்திக் கொள்ள வேண்டும்.
கேள்வி:- போர் குற்றங்களுக்காக ராஜபக்சேவை விசாரிக்க வேண்டும் என்பதை நீங்கள் வலியுறுத்துகிறீர்களா?.
பதில்:- ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தியது அப்படியே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்கள் விஷயத்தில் ராஜபக்சே போல் புதிய இலங்கை அதிபர் சிறிசேனா செயல்படக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
                                                                                                           மேலும், . . . . . 

பொதுச்செயலாளர் - க.அன்பழகன், பொருளாளர் - மு.க.ஸ்டாலின்: தி.மு.க. தலைவராக கருணாநிதி 11-வது முறையாக தேர்வு கனிமொழி எம்.பி. மகளிரணி செயலாளர் ஆனார்


சென்னை, ஜனவரி, 10-01-2015,
தி.மு.க. தலைவர் பதவிக்கு 11-வது முறையாக கருணாநிதி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், பொதுச் செயலாளராக க.அன்பழகனும், பொருளாளராக மு.க.ஸ்டாலினும், மகளிரணி செயலாளராக கனிமொழி எம்.பி.யும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்குழு கூட்டம்
தி.மு.க.வில் 14-வது உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, மாநில நிர்வாகிகளை தவிர, மாவட்ட, ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, காலை 9.35 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வந்தார். பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு - செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 1500 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைவர் பதவிக்கு தேர்தல்
கூட்டம் தொடங்கியதும், தி.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் தொடங்கியபோது, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கீழே அமர்ந்திருந்தனர். தேர்தலை நடத்திய சற்குணபாண்டியன், ‘‘தி.மு.க. தலைவர் பதவிக்கு கருணாநிதி மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவை 603 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளனர். கருணாநிதியை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, போட்டியின்றி தி.மு.க. தலைவராக கருணாநிதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அறிவித்தார்.
மேடையில் கருணாநிதி
இதனைத் தொடர்ந்து, பொதுக்குழுவில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
                                                                                                     மேலும், . . . . . .

தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை கண்டித்து போராட்டம்: சீமான் அறிவிப்பு

சென்னை, ஜனவரி, 10-01-2015,
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பத்தில் நடந்தன. அப்போதே அதனைக் கண்டித்து அந்தப் பகுதி மக்கள் தீவிரமாகப் போராடினார்கள்.
மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு நியூட்ரினோ ஆய்வு மையத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு. மண், மலை, காற்று, விவசாயம், வாழ்வாதாரம் என அனைத்துவிதமான பேரழிவுகளுக்கும் பாதை வகுக்கக்கூடிய இந்தக் கொடிய திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப் பார்க்கும் மத்திய அரசு, தமிழர்களின் உயிரையும் வாழ்வையும் கிள்ளுக் கீரையாகத்தான் நினைக்கிறது.
சுமார் 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தின் மூலமாக பூமி மற்றும் விண்வெளி ரகசியங்கள் குறித்து அறியலாம் என அரசுத் தரப்பு சொல்கிறது.
                                                                                                               மேலும், . . . . .

No comments:

Post a Comment