Wednesday 7 January 2015

இன்றைய முக்கிய செய்திகள் (08-01-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (08-01-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

பத்திரிகை அலுவலகத்துக்குள் சரமாரியாக தாக்குதல் 12 பேர் பலி


பாரீஸ் நகரில் பத்திரிகை அலுவலகத்தில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலி ஆனார்கள். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
பாரீஸ், ஜனவரி, 08-01-2015,
பிரான்சு நாட்டைச் சேர்ந்த வாரப்பத்திரிகை ‘சார்லி ஹெப்டோ’. இந்த பத்திரிகை, நையாண்டித்தனமாக எழுதுவதில் புகழ்பெற்றது.
தீவிரவாதிகள் தாக்குதல்
தலைநகர் பாரீசின் மையப்பகுதியில் இதன் அலுவலகம் உள்ளது. நேற்று காலை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு, அந்த பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுதம் தாங்கிய இரண்டு மர்ம நபர்கள் புகுந்தனர். தீவிரவாதிகள் என கருதப்படும் அவர்கள் கருப்பு முகமூடி அணிந்திருந்தனர். அதிநவீன துப்பாக்கியும், ராக்கெட் லாஞ்சரும் வைத்திருந்தனர்.
அவற்றை பயன்படுத்தி, பத்திரிகை அலுவலகத்துக்குள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
12 பேர் பலி
இந்த தாக்குதலில், 12 பேர் பலியானார்கள்.
                                                                                                      மேலும், . . . . 

கத்தை, கத்தையாக நோட்டுகள் சிதறி விழுந்தன விபத்தில் சிக்கிய காரில் 2½ கோடி ரூபாய் நோட்டுகள் ‘ஹவாலா பணத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை’

கோவை, ஜனவரி, 08-01-2015,
கோவையில் ‘ஹவாலா’ பணம் கொண்டு வரப்பட்ட கார் பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதனால் காரின் கதவு திறந்ததால் கத்தை, கத்தையாக ரூபாய் நோட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்தன.
ரூ.2 கோடியே 45 லட்சம் ஹவாலா பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் சிக்கிய கார்
கோவை பாலக்காடு பைபாஸ் சாலையில் நேற்று காலை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்தை நோக்கி ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. இந்த காரை யாசர் என்பவர் ஓட்டிச் சென்றார். காருக்குள் ஜாபர், ஜலீல் ஆகியோர் இருந்தனர்.
கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கார் வேகமாக வந்து கொண்டு இருந்தபோது, எதிரே வந்த மதுக்கரை மார்க்கெட் போடிபாளையம் செல்லும் 31-ம் நெம்பர் அரசு பஸ்சுடன் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த யாசர், ஜாபர் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர்.
ரோட்டில் சிதறிய ரூபாய் நோட்டுகள்
கார் மோதிய வேகத்தில், காரின் முன்பக்க கதவு திறந்தது. அப்போது காருக்குள் இருந்து 500 ரூபாய் நோட்டு கட்டுகள் ரோட்டில் சிதறி விழுந்தன.
                                                                                                                            மேலும், . . . . 

தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டி: கருணாநிதி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் பெயரில் மனுத்தாக்கல் நாளை பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்வு

சென்னை, ஜனவரி, 08-01-2015,
தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மு.கருணாநிதி, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் பெயரில் 60 மாவட்ட செயலாளர்கள் மனுத்தாக்கல் செய்தனர். நாளை அவர்கள் போட்டியின்றி, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தி.மு.க. உள்கட்சி தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் சிறப்பு பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் 9-ந் தேதி நடைபெறும் என்றும், அந்த கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி-மு.க.ஸ்டாலின் மனுத்தாக்கல்
பொதுச்செயலாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுவார் என்ற தகவல் அக்கட்சியினர் மத்தியில் பரவியதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின் தான் கட்சியில் பொருளாளர் பதவியை தவிர வேறு எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச்செயலாளர் பதவிக்கு அன்பழகனும், பொருளாளர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
                                                                                                          மேலும், . . . .  .

சென்னையில் பரபரப்பு சம்பவம் ஆள் இல்லாத குட்டி விமானம் அடுக்குமாடி குடியிருப்பில் விழுந்தது பறக்க விட்ட கிறிஸ்தவ பாடகர் அதிரடி கைது

சென்னை, ஜனவரி, 08-01-2015,
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆள் இல்லாத குட்டி விமானம் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விமானத்தை பறக்க விட்ட கிறிஸ்தவ பாடகர் கைது செய்யப்பட்டார்.
அடுக்குமாடி குடியிருப்பு
சென்னை பட்டினபாக்கம் எம்.ஆர்.சி.நகர் சத்யதேவ் அவெனியூவில் சோமர்செட் கிரீன்வேய்ஸ் என்ற பெயரில் ஆடம்பர சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 10 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் நீச்சல்குளம் உள்ளது. நட்சத்திர ஓட்டலைப்போன்று காணப்படும் இந்த குடியிருப்பில், வசதி படைத்தவர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள நீச்சல் குளத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் குளித்து விட்டு சூரிய ஒளிபடும்படி தரையில் படுத்திருந்தனர்.
ஆள் இல்லாத குட்டி விமானம்
அப்போது ஆள் இல்லாத சிறிய ரக குட்டி விமானம் ஒன்று வானத்தில் இருந்து அருகில் விழுந்தது. இதைப்பார்த்து சுற்றுலா பயணிகள் பதறி ஓடினார்கள். அந்த குட்டி விமானம் வீடியோ கேமரா பொருத்தப்பட்ட விமானம் ஆகும். பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. சுமார் 2½ அடி நீளம் உடையது. 3 கிலோ எடை உள்ளது.
வானத்தில் ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்து தரையில் உள்ள காட்சிகளை இந்த விமானத்தில் உள்ள வீடியோ கேமரா படம் பிடிக்கும் வசதி கொண்டது.
                                                                                                                    மேலும், . . .  . . .

No comments:

Post a Comment