Saturday 4 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (04-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (04-01-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

நடிகர் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்போம் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி, ஜனவரி, 04–01-2014,
தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேசிய பொது செயலாளர் முரளிதர்ராவ் தலைமை தாங்கினார்.
பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன், அகில இந்திய இணை பொதுசெயலாளர் சத்தீஷ் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
                                                                               மேலும், . .  . 

ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா? விரைவில் அறிவிப்பு
சென்னை, ஜனவரி, 04–01-2014,
நடிகை நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நமீதாவுக்கு சமீப காலமாக சமூக சேவை பணிகளில் நாட்டம் ஏற்பட்டு உள்ளது. ரசிகர்களை ரத்ததானம் செய்ய வைத்தார். பெண்களுக்கு கழிவறைகள் கட்டி கொடுத்தார். தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
                                                                                       மேலும், . . . . 

சென்னையில் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கியது வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
சென்னை, ஜனவரி, 04–01-2014,
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
எல்லைப் பகுதியில் ஏழ்மை நிலையில் இருக்கும் கிராமப்புற இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்கள் மூலம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்தது 2 ஆண்டுக்கு முன்பு தெரிய வந்தது.
இந்த கள்ள நோட்டுக் கும்பலை தேசிய புலனாய்வு முகமை போலீசார் கண் காணித்து வந்தனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் பிடிபட்டனர். இதனால் கள்ள நோட்டு புழக்கம் இல்லாமல் இருந்து வந்தது.
                                                                                                        மேலும், . . . . .

No comments:

Post a Comment