Monday 6 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-01-2014) காலை,IST- 10.00 மணி,நிலவரப்படி,

பேரழிவு சக்தியாக மோடியை சித்தரிப்பது, காங்கிரசின் போலி மதவாத மிரட்டல்?
புதுடில்லி, ஜனவரி, 07-01-2014,
காங்கிரஸ் கட்சி மதசார்பின்மையை வைத்து அரசியல் மிரட்டல் விடுப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கொள்கை ஆராய்ச்சி மைய தலைவர் பிரதாப் பானு மேத்தா, தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங் கூறிய கருத்துக்கள் பற்றி பிரதாப் பானு மேத்தாவிடம் கேட்கப்பட்டது. பேட்டியில் அவர் கூறியதாவது : பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும் என பிரதமர் கூறியது மதசார்பின்மையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி விடுத்து வரும் அரசியல் மிரட்டலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்;
                                                                                                 மேலும், . . . 

தே.மு.தி.க – பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நீடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பா.ஜனதா கூட்டணி அறிவிப்பு

சென்னை, ஜனவரி, 07-01-2014,
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் தமிழக பா.ஜனதா முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மோகன் ராஜீலு ஆகியோர் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்த்து வலுவான கூட்டணி அமைக்க பா.ஜனதா விரும்புகிறது. ம.தி.மு.க. இந்த அணியில் இடம் பெறுவதாக அறிவித்துவிட்டது.
பா.ம.க.வும் பா.ஜனதா கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் தே.மு.தி.க., மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பமான மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
                                                                                                           மேலும், . . . 

தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அவசர, அவசரமாக அமல்படுத்துவதா? மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம்


சென்னை, ஜனவரி, 07-01-2014,
தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் அவசர, அவசரமாக அமல்படுத்துவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
                                                                                                  மேலும், . . . 

No comments:

Post a Comment