Friday 3 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (03-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (03-01-2014) மாலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,

தற்போது விற்பனையில், . . . . . .

3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் எண்ணம் இல்லை ராகுலுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது: மன்மோகன் சிங்
புதுடெல்லி, 2014, ஜனவரி, 03 -
அடுத்த பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பின்னணியில் ராகுலுக்கு வழிவிட்டு, பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகுவார் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை பிரதமர் அலுவலகமும் காங்கிரஸ் கட்சியும் திட்டவட்டமாக மறுத்து இருந்தது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து மத்திய அரசின் சாதனைகளை விளக்கி, பிரதமர் மன்மோகன்சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.
மன்மோகன் சிங், 4 மாநில தேர்தலில் தோல்வியில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக் கொண்டது என்று கூறியுள்ளார். மேலும், தோல்விக்கு காங்கிரஸ் பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளைவிட நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

                                                                      மேலும், . . . 

பிரதமருக்கு இது வழியனுப்பு பிரஸ்மீட் பா.ஜ., அருண் ஜெட்லி தாக்கு
புதுடெல்லி, 2014, ஜனவரி, 03 -
பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டி கேலிக்கூத்தாக இருக்கிறது என்றும், இன்று நடந்தது அவருக்கு வழியனுப்பு பிரஸ் மீட் என்றும் பா.ஜ., ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண்ஜெட்லி கூறினார். பா.ஜ., மூத்த நிர்வாகிகள் இன்று பிரதமர் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
                                                          மேலும், . . . .

ஓரினச் சேர்க்கை தீர்ப்பு மத்திய மந்திரிகள் தெரிவித்த கருத்துகள் ஏற்புடையது அல்ல - சுப்ரீம் கோர்ட்டு
புதுடெல்லி, 2014, ஜனவரி, 03 -
’ஓரினச்சேர்க்கை குற்றமல்ல’ என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது. ‘இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது’ என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
                                                          மேலும், . . . . . .

No comments:

Post a Comment