Sunday 12 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (12-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (12-01-2014) காலை,IST- 09.00 மணி,நிலவரப்படி,


பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சேர தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விஜயகாந்தை சந்தித்து திருமாவளவன் பேச்சு
சென்னை, ஜனவரி, 12-01-2014,
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர வேண்டும் என்று, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
விஜயகாந்துடன் சந்திப்பு
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை உளுந்தூர்பேட்டை மாநாட்டில் அறிவிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த நிலையில், தே.மு.தி.க.வை எப்படியும் தங்களது கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்று, பா.ஜனதா, காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

                                                                                                                           மேலும், . . .  

கருணாநிதியுடன் மு.க.அழகிரி ‘திடீர்’ சந்திப்பு ‘‘சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டியவர்கள் எனது ஆதரவாளர்கள் அல்ல’’
சென்னை, ஜனவரி, 12-01-2014,
தி.மு.க. தலைவர் கருணாநிதியை மு.க.அழகிரி நேற்று திடீரென சந்தித்து பேசினார். பின்னர், வெளியே வந்த அவரிடம் ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஒட்டியவர்கள் எனது ஆதரவாளர்கள் அல்ல என்று பதில் அளித்தார்.
மு.க.அழகிரி
தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி.யின் பிறந்தநாளையொட்டி, மதுரையில் அவரது ஆதரவாளர்கள், ஒரு சில பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக கூறி, மதுரை மாநகர் தி.மு.க. அமைப்புகள் முழுவதும் அதிரடியாக கலைக்கப்பட்டது.
இந்த நிலையில், மு.க.அழகிரி அளித்த பேட்டி ஒன்றில், தி.மு.க.வுக்கு எதிரான சில கருத்துகளை கூறியிருந்தார். இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்ததுடன், கட்சியில் இருந்து நீக்க நேரிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.
                                                                                               மேலும், . . . .

சென்னையில் 20–ந் தேதி இரு தரப்பு பேச்சுவார்த்தை இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 275 பேரும் ஓரிரு நாளில் விடுதலை ஜெயலலிதா அறிக்கை
சென்னை, ஜனவரி, 12-01-2014,
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:–
மீனவர்களுக்கு உதவித்தொகை
எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு ஏழை, எளிய மக்களின் பாதுகாவலனாகவும், மீனவர்களின் நண்பனாகவும் திகழ்ந்து வருகிறது.
மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் மாத உதவித்தொகை 2,000 ரூபாய் என உயர்த்தி வழங்கியதோடு, மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் நான் உருவாக்கினேன். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அயல் நாட்டவரால் சிறைபிடிக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்பும் வரை பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகையை 50 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக நான் உயர்த்தி வழங்கினேன். இந்த அடிப்படையில்,
                                                                                                        மேலும், . . . .



No comments:

Post a Comment