Friday 24 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (25-01-2014) காலை,IST- 08.00 மணி,நிலவரப்படி,
 
தி.மு.க.வில் இருந்து, தென் மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி தற்காலிக நீக்கம் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு
சென்னை, ஜனவரி, 25-01-2014,
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்துக் கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க. பொதுக்குழுவில்
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதற் கான முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை.
ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட படத்தில் மு.க.அழகிரியையும் இணைத்து, மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்தனர். இது தி.மு.க. தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. பேனர் வைத்தவர்களை தி.மு.க. தலைமை கழகம் இடை நீக்கம் செய்தது.

                                                                                                                மேலும், . . . 

பா.ஜனதா கட்சி பொறுப்பாளர் சென்னை வருகை பா.ம.க.வுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை தொடக்கம்
சென்னை, ஜனவரி, 25-01-2014,
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, பா.ம.க.வுடன் இன்று (சனிக்கிழமை) மீண்டும் பா.ஜனதா கட்சி பேச்சு வார்த்தையை தொடங்குகிறது. அதற்கான, அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று சென்னை வருகிறார்.அதே நேரத்தில், தமிழகத்தில் புதிய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு வருகிறது.
பா.ம.க.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க., தமிழகத்தில் 6 தொகுதியிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என மொத்தம் 7 இடங்களில் போட்டியிட்டது. அதாவது, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதியிலும், புதுச்சேரியிலும் வேட்பாளரை நிறுத்தியது. ஆனால், ஒன்றில்கூட பா.ம.க. வெற்றிபெறவில்லை.இந்த நிலையில், 2011–ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின்னர் பா.ம.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி சேரப்போவதில்லை என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
சமூக ஜனநாயக கூட்டணி
அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2013) அக்டோபர் மாதம் சமுதாய இயக்கங்களுடன் ஒன்றிணைந்து சமூக ஜனநாயக கூட்டணி என்ற புதிய அணியை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தலில் இந்த அணி தனித்தே போட்டியிடும் என்று அறிவித்ததுடன், பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அறிவித்தார்.
                                                                                                              மேலும், . . . 

‘தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள்’ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
சென்னை, ஜனவரி, 25-01-2014,
‘தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள்’ என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி கூறினார்.
தி.மு.க.வில் இருந்து நேற்று அதிரடியாக தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி எம்.பி. நேற்று இரவு தொலைபேசி மூலம் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு மு.க.அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:–
நியாயம் வெல்லும்
கேள்வி:– உங்கள் மீது தி.மு.க. தலைமை எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?.
                                                                                                 மேலும், . .. 

No comments:

Post a Comment