Monday 20 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (20-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (20-01-2014) மாலை,IST- 02.00 மணி,நிலவரப்படி,

கூட்டணியில் காங்கிரசை சேர்க்க பயப்படும் கட்சிகள் எதிர்ப்பு அலை வீசுவதால் பரிதாபம்
சென்னை, ஜனவரி, 20–01-2014,
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஒரு அணியாகவும், தி.மு.க. ஒரு அணியாகவும், பா.ஜனதா ஒரு அணியாகவும் களத்தில் குதிக்கிறது. ஆனால் காங்கிரஸ் எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
அ.தி.மு.க.வுக்கு கம்யூனிஸ்டு கட்சிகள், மூவேந்தர் முன்னணி கழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் ஆதரவாக உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

                                                                                           மேலும், . . . . . . 

கோடீசுவர பெண்ணாகா வலம் வந்த சுனந்தாவுக்கு ரூ. 95 கோடியில் துபாயில் 12 சொகுசு வீடுகள்
புதுடெல்லி, ஜனவரி, 20–01-2014,
மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112 கோடியிருக்கும். 2012–13–ம் ஆண்டு சசிதரூர் தாக்கல் செய்த சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பில் இருந்து இது தெரிய வந்தது.
துபாயில் அவருக்கு 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 95 கோடியிருக்கும் இதில் ரூ.15 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கனடாவிலும் ரூ.3½ கோடிக்கு வீடு உள்ளது. இது ரூ.1.65 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.6 கோடிக்கு தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் வைத்திருந்தார். வங்கியில் டெபாசிட் செய்தது மற்றும் கையில் வைத்திருந்த மொத்த பணம் ரூ. 7 கோடியாகும்.

                                                                                 மேலும், . . . . 

யாருடன் கூட்டணி சேருவது? விஜயகாந்த் தீவிர ஆலோசனை
சென்னை, ஜனவரி, 20–01-2014,
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன. அகில இந்திய அளவில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்த வியூகங்களை அமைத்து வருகின்றன. பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதன் மூலம் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று அந்த கட்சி கருதுகிறது.
பா.ஜனதாவை முறியடிக்க ராகுல்காந்தி காங்கிரஸ் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத சார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்று அவர் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் அ.தி.மு.க தனித்து போட்டியிடுகிறது. பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க, பா.ம.க., ம.தி.முக. ஆகிய கட்சிகளை சேர்க்க தமிழருவி மணியன் முயற்சி செய்து வருகிறார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டார். பா.ம.க சார்பில் அன்புமணி ராமராஸ் டெல்லி சென்று பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புதிய தமிழகம், மனித நேயமக்கள் கட்சி ஆகியவை உள்ளன. தமிழக காங்கிரசுடன் எந்த கட்சியும் இல்லை. தே.மு.தி.க.வும் தனது முடிவை இதுவரை அறிவிக்க வில்லை.
தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணயில் சேர்க்க பா.ஜனதா, தி.மு.க, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

                                                                                                                     மேலும், . . . . 

No comments:

Post a Comment