Thursday 9 January 2014

இன்றைய முக்கிய செய்திகள் (10-01-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (10-01-2014) காலை,IST- 10.00 மணி,நிலவரப்படி,

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின். படங்களை வெளியிட்டது, அமெரிக்கா
கொழும்பு, ஜனவரி, 10-01-2014,
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.
தமிழர்கள் கொலை
இலங்கையில், கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே இறுதிக்கட்ட சண்டை நடந்தது. அப்போது, அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம்பேரை ராணுவம் குண்டு வீசி கொன்றதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இதுபற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அதை இலங்கை அரசு நிராகரித்து வருகிறது.
                                                                 மேலும், . . . . . 

தலைமைச்செயலகத்துக்கு வெளியே ‘சனிக்கிழமை தோறும் தெருக்களில் அமர்ந்து மக்களிடம் குறை கேட்போம்’ டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவால் அறிவிப்பு
புதுடெல்லி, ஜனவரி, 10-01-2014,
ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும், மந்திரிகளும் தலைமைச்செயலகத்துக்கு வெளியே உள்ள தெருக்களில் அமர்ந்து மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கு தீர்வு காண்போம் என்று டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை
மக்களின் குறைகளை தீர்ப்பதிலும், ஊழலை ஒழிப்பதிலும் டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். ஊழலை ஒழிப்பதற்கான உதவி மையத்தை (ஹெல்ப்லைன்) டெல்லியில் நேற்று முன்தினம் அவர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், பொதுமக்களின் குறைகளை தீர்ப்பது தொடர்பாக கெஜ்ரிவால் நேற்று அவர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
                                                                                                                மேலும், . . . . .

அனுமதி பெறாமல் வீதியில் ‘பேனர்’ வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, ஜனவரி, 10-01-2014,
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
ராட்சத பேனர்கள்
சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் ராட்சத பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த பேனர்களை அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வைக்கின்றனர்.
இதுபோன்ற பேனர்களை வைப்பதற்கு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோரிடம் முறையான அனுமதி பெறுவதில்லை. சட்டவிரோதமாக, விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பேனர்களை அரசு அதிகாரிகளும் அகற்றுவதில்லை. ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு, சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
                                                                                                மேலும், . . . .

No comments:

Post a Comment