Thursday 12 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (13-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (13-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

 ஸ்ரீரங்கம் தொகுதி்யில் ஓட்டுப்பதிவு துவங்கியது


திருச்சி, பிப்ரவரி, 13-02-2015,
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் தற்போது ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6 மணி வரையில் ஓட்டு்ப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 322 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளது. அனைத்து ஒட்டுச்சாவடிகளும் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. இன்று பதிவாகும் ஓட்டுகள் வரும் 16-ம் தேதி எண்ணப்படுகின்றன. ஓட்டுப்பதிவுகள் இணைய வழி முலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும் 9444123456 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வாக்குபதிவு நிலவரம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். .மொத்தமுள்ள 322ஒட்டுச் சாவடிகளில் 79 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் வளர்மதி பா.ஜ., சார்பில் சுப்பிரமணியம் திமுக சார்பில் ஆனந்த், மா.கம்யூ., சார்பில் அண்ணாதுரை உட்பட 29 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழக இடைத் தேர்தல் வரலாற்றில், 'திருமங்கலம் பார்முலா' தான் பேசப்பட்டு வருகிறது. ஓட்டுக்கு 2,000 ரூபாய் வீதம், வீடு வீடாக வினியோகித்ததாக தகவல் வெளியாகியது.
பணமழை
இடையில் ஆட்சிகள் மாறிய போதிலும், இடைத் தேர்தல் நடைமுறைகள் மாறவில்லை.
                                                                                                            மேலும், . . . . 

பிரதமர் மோடியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மோடி மறுப்பு

புதுடெல்லி, பிப்ரவரி, 13-02-2015,
பிரதமர் நரேந்திர மோடியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க வருமாறு கெஜ்ரிவால் விடுத்த அழைப்பை மோடி நிராகரித்தார்.
மோடி வாழ்த்து
டெல்லி சட்டசபை தேர்தலில் ‘ஆம் ஆத்மி‘ கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றது. சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நாளை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.
                                                                                                                மேலும், . . . 

பீகாரில் அரசியல் குழப்பம் நீடிப்பு மெஜாரிட்டியை நிரூபிக்க மஞ்சிக்கு கவர்னர் உத்தரவு சட்டசபையில் 20-ந் தேதி பலப்பரீட்சை

பீகார் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்-மந்திரி மஞ்சிக்கு கவர்னர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் 20-ந் தேதி பலப்பரீட்சை நடக்கிறது.
பாட்னா, பிப்ரவரி, 13-02-2015,
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்ததை தொடர்ந்து, முதல்- மந்திரி ஜிதன்ராம் மஞ்சி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் சட்டசபை கட்சித்தலைவராக (முதல்-மந்திரி) நிதிஷ் குமாரை கட்சி எம்.எல். ஏ.க்கள் தேர்வு செய்தனர். அவருக்கு காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர்.
ஜனாதிபதியிடம் கோரிக்கை
இதைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்த நிதிஷ் குமார், தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
                                                                                                                      மேலும், . . .

இலங்கை கோர்ட்டுகளில் வக்கீல் மூலம் இன்று மனு தாக்கல்: தமிழக மீனவர்களின் படகுகளை கொண்டுவர மீட்புகுழு அனுப்பப்படும் தமிழக அரசு தகவல்

சென்னை, பிப்ரவரி, 13-02-2015,
இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை அங்குள்ள கோர்ட்டு மூலம் மீட்டு, பழுதுபார்த்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சட்டசபையில் தீர்மானம்
இலங்கை அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ள தமிழக மீன்பிடிப் படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கடந்த 5.12.14 அன்று தமிழக சட்டசபையில் தமிழக அரசால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம், முதல்-அமைச்சரால், பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை மந்திரிகளுக்கிடையே நடைபெற்ற கூட்டத்தில் மீனவர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும்,
                                                                                                               மேலும், . .  .

No comments:

Post a Comment