Monday 16 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (17-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

இந்த ஆண்டின் முதல் கூட்டம்: சட்டசபையில், இன்று கவர்னர் உரையாற்றுகிறார்

சென்னை, பிப்ரவரி, 17-02-2015,
தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. கூட்டத்தில் கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார்.
முதல் கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் நடைபெறும். முதல் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் மாநில கவர்னர் உரையாற்றுவார்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று (17-ந் தேதி) தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல்நாள் கூட்டத்தில் காலை 11.15 மணிக்கு கவர்னர் கே.ரோசய்யா உரையாற்றுகிறார்.
மரபுப்படி வரவேற்பு
உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் கே.ரோசய்யா இன்று காலையில் சட்டசபைக்கு வருவார். அவரை மரபுப்படி சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அங்குள்ள சபாநாயகர் இருக்கையில் கவர்னர் ரோசய்யாவை அமர வைப்பார்கள். அதைத் தொடர்ந்து கவர்னர் உரை நிகழ்த்தத் தொடங்குவார்.
கவர்னர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடிந்த பிறகு அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அதைத் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகள் முடிக்கப்படும்.
                                                                                                   மேலும், . . . . 

இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் பிரதமர் மோடி-சிறிசேனா முன்னிலையில் கையெழுத்து

புதுடெல்லி, பிப்ரவரி, 17-02-2015,
பிரதமர் மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மாலை இந்தியா வந்தார். அதிபராக பதவி ஏற்றபின் இது அவரது முதல் வெளிநாட்டு பயணம் ஆகும். விமானம் மூலம் டெல்லி வந்த அவரை விமான நிலையத்தில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
இரவில் சிறிசேனா டெல்லியில் உள்ள மவுரியா ஓட்டலில் தங்கினார். அவருடன் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றும் வந்து உள்ளது.
நேற்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் சிறிசேனாவுக்கு சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறிசேனாவை பிரதமர் நரேந்திர மோடி கைகுலுக்கி வரவேற்றார். தனக்கு அளிக்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
மோடி-சிறிசேனா பேச்சுவார்த்தை
அதன்பிறகு சிறிசேனா தனது மனைவியுடன் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
                                                                                                       மேலும், . . . . . 

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க. அமோக வெற்றி அ.தி.மு.க-1,51,561; தி.மு.க-55,045 பா.ஜனதா-5,015

ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி, தி.மு.க. வேட்பாளரை விட 96 ஆயிரத்து 516 வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர்.
திருச்சி, பிப்ரவரி, 17-02-2015,
தமிழக சட்டசபையில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
29 வேட்பாளர்கள் போட்டி
இந்த தேர்தலில் வளர்மதி (அ.தி.மு.க.) ஆனந்த் (தி.மு.க.) சுப்பிரமணியம் (பா.ஜ.க.), அண்ணாதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஹேமநாதன் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 29 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் 81.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
அ.தி.மு.க. அமோக வெற்றி
அங்கு நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் வளர்மதி முன்னணியில் இருந்தார்.
                                                                                           மேலும் , .  . . .

கொலையுண்டதாக கருதப்பட்டவர் உயிருடன் இருப்பது அம்பலம் புதைக்கப்பட்ட பெண் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு

விருதுநகர், பிப்ரவரி, 17-02-2015,
விருதுநகரில் கணவரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனது தாத்தாவுடன் உயிர் வாழ்ந்து வருவது அம்பலமானது.
எனவே புதைக்கப்பட்ட பெண் உடலை தோண்டி எடுத்து மறுவிசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
பெண் கொலை வழக்கு
விருதுநகர் மேலரதவீதி அண்ணாமலை சந்தையை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 33). கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது ரெங்கராஜன், தனது காதல் மனைவி கோமதியை அடித்துக் கொலை செய்து சாக்குமூடையில் கட்டி வைத்து இருப்பதாக தெரிவித்தார்.
இதன்பேரில் அவரையும் அவரது நண்பர் ஆறுமுகம் (31) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலையுண்ட பெண்உயிருடன் இருப்பது அம்பலம்
இந்த வழக்கில் போலீசார் முறையான விசாரணை நடத்தவில்லை என புகார் கூறப்பட்டது.
                                                                                                  மேலும் , . .  . .

No comments:

Post a Comment