Sunday 15 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (16-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஸ்ரீரங்கம் தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை மதியம் 1 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்

திருச்சி, பிப்ரவரி, 16-02-2015,
ஸ்ரீரங்கம் தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று(திங்கட்கிழமை) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் 1 மணிக்கு அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
தமிழகத்தில் காலியாக இருந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 13-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 281 பேரில், 2 லட்சத்து 21 ஆயிரத்து 172 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர்.
                                                                                          மேலும்,. . . .  

இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் இலங்கை அதிபர் சிறிசேனா டெல்லி வந்தார் பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி, பிப்ரவரி, 16-02-2015,
4 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று டெல்லி வந்தார். இன்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை, அகதிகள் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
சிறிசேனா வருகை
இலங்கையில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்சேயை வீழ்த்தி மைத்ரிபாலா சிறிசேனா புதிய அதிபராக பதவி ஏற்றார்.
ராஜபக்சே சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டினார். ஆனால் சிறிசேனா அண்டை நாடான இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்.
சிறிசேனா அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த, பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
                                                                                                              மேலும், . . . .

புலி கடித்து பெண் பலியானதை கண்டித்து வன்முறை அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு அதிகாரிகள், போலீசார் மீது தாக்குதல்

பந்தலூர், பிப்ரவரி, 16-02-2015,
கூடலூர் அருகே புலி கடித்து பெண் பலியானதை கண்டித்து பயங்கர வன்முறை வெடித்தது. இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் மற்றும் மகனுக்கு அரசு வேலையும் வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
வனத்துறை ஊழியர்கள் மீது தாக்குதல்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பந்தலூர் தாலுகா பாட்டவயல் பகுதியில் நேற்று முன்தினம் தேயிலை பறித்து கொண்டிருந்த மகாலட்சுமி (வயது 32) என்ற பெண்ணை புலி கடித்து கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மகாலட்சுமியின் உடலை ரோட்டில் வைத்து மறியல் செய்தனர்.
பின்னர் ஒரு கும்பல் பிதிர்காடு வனச்சரக அலுவலகத்தை அடித்து நொறுக்கியதுடன், வன அலுவலகத்துக்கு சொந்தமான பல வாகனங்களை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு பணியில் இருந்த வனச்சரகர்கள் மற்றும் வனத்துறையினரை உருட்டு கட்டையால் தாக்கியது. இதில் காயமடைந்த வனச்சரகர் சோமசுந்தரம், காப்பாளர் ஜெயக்குமார் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண் போலீசார் மீது தாக்குதல்
இந்த வன்முறை 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட முக்கட்டி வனச்சரக அலுவலகத்துக்கு சென்ற ஒரு கும்பல்,
                                                                                      மேலும், . . . .

2016 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி சேலம் மாநாட்டில் ராமதாஸ் அறிவிப்பு


சேலம், பிப்.16-
2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் முதல்-அமைச்சர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்படுவதாக சேலத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மாநில மாநாடு
பாட்டாளி மக்கள் கட்சியின், ‘2016 ஆட்சி மாற்றத்திற்கான அரசியல் மாநாடு’ சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு எருமாபாளையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் தமிழரசு வரவேற்றார். மாநில துணைத்தலைவர்கள் மு.கார்த்தி, கண்ணையன், பி.என்.குணசேகரன், மாநில துணைப்பொதுச்செயலாளர்கள் இரா.அருள், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
                                                                                                   மேலும், . . . . 

No comments:

Post a Comment