Saturday 14 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (15-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ராம் லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் திரண்டனர் டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்றார் டெல்லியை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றப்போவதாக சபதம்


புதுடெல்லி, பிப்ரவரி, 15-02-2015,
டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் ஒரு துணை முதல்-மந்திரியும், 5 மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
அப்போது பேசிய கெஜ்ரிவால் இந்தியாவின் ஊழலற்ற முதல் மாநிலமாக டெல்லியை உருவாக்குவோம் என்று சபதம் செய்தார்.
கெஜ்ரிவால் பதவி ஏற்பு
அண்மையில் டெல்லி மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து மாநில துணை நிலை கவர்னர் நஜீப் சுங் கெஜ்ரிவாலை முதல்-மந்திரியாக பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி பதவி ஏற்றுக்கொள்வதாக கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி அவருடைய பதவி ஏற்பு விழா டெல்லி ராம் லீலா மைதானத்தில் நேற்று மதியம் 12 மணி அளவில் எளிய முறையில் நடந்தது.
மைதானத்தில் திரண்டு இருந்த 1 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் முன்னிலையில் கெஜ்ரிவால் 2-வது முறையாக டெல்லி முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது வழக்கமான தனது பாணியில் வெள்ளை நிற தொப்பியும், நீல நிற ஸ்வெட்டரும் அணிந்து அவர் காணப்பட்டார்.
மந்திரிகள்
கெஜ்ரிவாலுக்கு கவர்னர் நஜீப் சுங் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கெஜ்ரிவாலை தொடர்ந்து துணை முதல்-மந்திரியாக கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா பதவி ஏற்றுக்கொண்டார்.
சத்யேந்திர ஜெயின், கோபால் ராய், அசிம்முகமது கான், சந்தீப்குமார், ஜிதேந்திர சிங் தோமார் ஆகியோர் கேபினட் அந்தஸ்து மந்திரிகளாக பதவி ஏற்றனர்.
பதவி ஏற்றுக்கொண்ட பின்பு பொதுமக்கள் முன்னிலையில் கெஜ்ரிவால் உரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-
                                                                                                             மேலும், . . . .

சென்னையில் மே மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னையில் மே மாதம் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை, பிப்ரவரி, 15-02-2015,
சென்னை வர்த்தக மையத்தில் வருகிற மே 23 மற்றும் 24-ந் தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
இதற்கான முன்னேற்பாட்டு நிகழ்ச்சி, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டு வரலாற்றில் இந்த நாள் முக்கிய தினமாக அமைந்துள்ளது.
                                                                                         மேலும், . . . . .

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: சென்னையில், நாய்களுக்கு வினோத திருமணம் இந்து முன்னணியினர் 20 பேர் கைதாகி விடுதலை



சென்னை, பிப்ரவரி, 15-02-2015,
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாய்களுக்கு வினோத திருமணத்தை நடத்திய இந்து முன்னணியினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
காதலர் தின எதிர்ப்பு
இந்த நிலையில் காதலர் தினமான நேற்று சென்னை புளியந்தோப்பு, மெயின் ரோட்டில் இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு வினோத திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2 பொமேரியன் நாய்களை கையில் ஏந்தி மேள தாளத்துடன் இந்து முன்னணியினர் அழைத்து வந்தனர். பின்னர் குட்டி தாம்பரன் தெரு முனை சந்திப்பில் நாய்க்குட்டிகளுக்கு மாலை அணிவித்து, பொட்டு வைத்து திருமணம் செய்து வைத்தனர்.
கைது
பின்னர் நாய்க்குட்டிகளை கையில் தூக்கிக்கொண்டு, காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி அந்த தெரு வழியாக சுமார் 20 பேர் ஊர்வலமாக வந்தனர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்து, அருகில் உள்ள திருமண மகாலில் அடைத்தனர்.
                                                                                                               மேலும், . . . . .

செயல்படுத்தாத திட்டத்துக்காக சுதந்திர போராட்ட தியாகியின் நிலத்தை ஆர்ஜிதம் செய்வதா? திரும்பக் கொடுக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, பிப்ரவரி, 15-02-2015,
சுதந்திர போராட்ட தியாகியின் நிலத்தை ஆர்ஜிதம் செய்யாமல் அதை அவரது வாரிசுதாரர்களுக்கே திரும்பக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மரங்கள் பயிரீடு
சுதந்திர போராட்ட தியாகி சுப்பையா. சுதந்திரத்துக்காக இவர் பட்ட பாடுகளுக்காக சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில் அரசால் 7.83 ஏக்கர் நிலம் 1949-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த இடத்தில் பயிரிட்டு வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு நிலம் கொடுக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் 1973-ம் ஆண்டில் சுப்பையா மரணமடைந்தார். அந்த இடத்தை அவரது வாரிசுகள் பயன்படுத்துகின்றனர். அங்கு வீடு கட்டியும், நெல்லி, அசோகா மரம், புளியமரம், கமலா ஆரஞ்சு மரம் நார்த்தை, மாமரம் போன்றவற்றை பயிரிட்டு வாழ்கின்றனர்.
நோக்கம் நிறைவேறவில்லை
இந்த நிலையில் மறைமலைநகரில் குடியிருப்புப் பகுதி கட்டும் திட்டத்தின் கீழ், அந்த 7.83 ஏக்கர் நிலம் உட்பட 123.49 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதை எதிர்த்து வாரிசுதாரர்கள் அவ்வப்போது வழக்கு தாக்கல் செய்து வந்தனர்.
அரசு அந்த நிலத்தை கையகப்படுத்துவதாக உத்தரவிட்டு இருந்தாலும், அந்த இடத்தை தொடர்ந்து வாரிசுதாரர்களே பயன்படுத்தி வந்தனர்.
                                                                                                         மேலும், . . . .

No comments:

Post a Comment