Monday 2 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (03-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

ஸ்ரீரங்கம் பா.ஜனதா வேட்பாளருக்கு விஜயகாந்த் வெளிப்படையான ஆதரவு அளிக்காதது ஏன்? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சென்னை, பிப்ரவரி, 03-02-2015,
ஸ்ரீரங்கம் தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு விஜயகாந்த் வெளிப்படையான ஆதரவு அளிக்காதது ஏன்? என்பதற்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்தார்.
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உறுப்பினர் சேர்க்கை
பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 5 கோடியை தாண்டுகிறது. தமிழகத்தில் இதுவரை 13 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் 2 மாதத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை நாங்கள் சேர்த்து விடுவோம். ஸ்ரீரங்கத்தில் பாரதீய ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனை ஸ்ரீரங்கம் பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம். வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நாங்கள் நியமித்து இருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் தேர்தலில் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். பாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் மிரட்டப் படுகிறார்கள். பணம் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஸ்ரீரங்கத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
விஜயகாந்த்
ராணிப்பேட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகி இருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் திட்டத்தில் மட்டும் தான் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. மற்ற திட்டங்களில் பெயில் மார்க் தான் பெற்று இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
                                                                                                           மேலும், . . . .

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை: அனைத்து கட்சி தலைவர்களிடம் கலந்து பேசி சட்டத்தை கொண்டுவர வேண்டும் கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, பிப்ரவரி, 03-02-2015,
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கு முன் அனைத்து கட்சி தலைவர்களிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறை தண்டனை
தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரப்போவதாக இன்றைய நாளேடுகளில் செய்தி வந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் முதல், மக்களவை தேர்தல் வரை வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்களை கொடுக்கும் போக்கினை ஆளுங்கட்சிக்காரர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான தேர்தலில், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல முயற்சிகள் எடுத்தாலும், அது உரிய பலனை தரவில்லை.
தற்போதுள்ள சட்டப்படி, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருள் லஞ்சமாக கொடுப்பது குறித்து புகார் செய்யப்படுவதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யலாம்.
                                                                                                  மேலும், . . . . .

மாணவி கொலையில் திடீர் திருப்பம்: நகைக்கு ஆசைப்பட்டு தோழியே கொலை செய்தது அம்பலம் பரபரப்பு வாக்குமூலம்

திண்டிவனம், பிப்ரவரி, 03-02-2015,
திண்டிவனம் அருகே மாணவி கொலையில் திடீர் திருப்பமாக, நகைக்கு ஆசைப்பட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்த தோழியை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கூட மாணவி
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சசிரேகா (வயது 14). ஓமந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு சசிரேகாவிற்கு பிறந்த நாள் என்பதால் பெற்றோர் வாங்கிக் கொடுத்த தங்க சங்கிலி, கம்மல், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றாள்.
மாலையில் பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் சசிரேகா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சசிரேகாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் அதே கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள தரைக்கிணற்றில் சசிரேகாவின் பிணம் கிடந்தது.
நகைகள் மாயம்
கிளியனூர் போலீசார் சசிரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்தது. இதனால் சசிரேகாவின் பெற்றோர் போலீசாரிடம் தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தனர்.
எனவே நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார் சசிரேகாவுடன் படிக்கும் சக தோழிகள் மற்றும் கிராம மக்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
                                                                                                          மேலும், . . . . .

போலீஸ் நிலையத்தில் வாலிபர்கள் சித்ரவதை 2 போலீசாருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு டி.ஜி.பி., அரசு வக்கீல்கள், பத்திரிகைகளுக்கு பாராட்டு

சென்னை, பிப்ரவரி, 03-02-2015,
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்களை கொடூர சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்கள் இருவருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்து விட்டது.
போலீஸ் சித்ரவதை
செல்போன் திருட்டு வழக்கில் 2 வாலிபர்களையும், 3 சிறுவர்களையும் மாம்பலம் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அப்போது, நடந்த விசாரணையின்போது, கைது செய்யப்பட்ட வாலிபர்களை, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும்படி போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். பின்னர், கைது செய்யப்பட்ட வாலிபர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு ஒரு வாலிபரின் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த வாலிபருக்கு நடந்த கொடுமைகளை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. இதனடிப்படையில், வாலிபர்களை சித்ரவதை செய்த போலீஸ்காரர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்ஜாமீன் மனு
இந்த வழக்கில், தேடப்பட்டு வரும் மாம்பலம் போலீஸ் நிலைய போலீஸ்காரர்கள் சேதுராமன், சீனிவாசன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். அதேபோல, இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி பி.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
                                                                                                       மேலும், . . . . .

No comments:

Post a Comment