Tuesday 24 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (24-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் அன்னா ஹசாரே போராட்டம் தொடங்கினார் மத்திய அரசு மீது கடும் தாக்கு

புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2015,
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று தொடங்கிய அன்னா ஹசாரே, மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
அன்னா ஹசாரே தர்ணா
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக பிரபல காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான 77 வயது அன்னா ஹசாரே அறிவித்து இருந்தார். அதன்படி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று அவர் தனது போராட்டத்தை தொடங்கினார்.
இதில் அன்னா ஹசாரேயுடன் நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்களும் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். நர்மதா நதி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மேதா பட்கரும் போராட்டத்தில் பங்கு கொண்டார். ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசும் வந்திருந்தார்.
மத்திய அரசு மீது தாக்கு
போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசுகையில் மத்திய அரசை கடுமையாக தாக்கினார்.
                                                                                                         மேலும், . . . .

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது மேலும் 35 திட்டங்களுக்கு நேரடி மானியம் வழங்கப்படும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை


பாராளுமன்றத்தில் நேற்று உரை நிகழ்த்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மேலும் 35 திட்டங்களுக்கான மானியம் நேரடியாக வழங்கப்படும் என்றும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் கூறினார்.
புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2015,
3 மாத காலம் நடைபெறும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.
ஜனாதிபதிக்கு வரவேற்பு
நேற்றைய முதல் நாள் கூட்டம் இரு சபைகளின் கூட்டு கூட்டமாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
இதற்காக அவர்பாரம்பரிய முறைப்படி குதிரைப் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார். பாராளுமன்ற வாசலில் அவரை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கையா நாயுடு, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
உரை நிகழ்த்தினார்
அதன் பிறகு இரு சபைகளின் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
                                                                                                          மேலும், . . . .. 

தேர்தல்களில் காங்கிரசுக்கு தொடர் தோல்வி ராகுல் காந்தி, அரசியலில் இருந்து சில வாரங்களுக்கு திடீர் ‘ விடுமுறை’

புதுடெல்லி, பிப்ரவரி, 24-02-2015,
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்விகளை தொடர்ந்து கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணைத்தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு விடுமுறை எடுத்து உள்ளார்.
தேர்தல்களில் தோல்வி
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்திய சுதந்திரத்துக்குப்பின் நடந்த தேர்தல்களில் அந்த கட்சி பெற்ற மிகப்பெரிய தோல்வி இதுவாகும். மேலும் தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது.
இந்த தோல்வி சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலிலும் நீடித்தது. அங்கு 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி, தற்போதைய தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்கால திட்டங்கள்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு உள்ளிட்ட முக்கியமான அமர்வுகள் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெறும்
                                                                                                           மேலும், . . . .

செத்த பாம்பை அடிக்க வேண்டாம்: மீத்தேன் சோதனை உரிமம் காலாவதி ஆகிவிட்டது; அச்சப்படத் தேவை இல்லை சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


சென்னை, பிப்ரவரி, 24-02-2015,
மீத்தேன் சோதனை உரிமம் காலாவதியாகிவிட்டதால், அந்தத் திட்டம் பற்றி யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஒப்புதல் வழங்கிய தி.மு.க. அமைச்சர்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் புரிந்த விவாதத்துக்கு பதிலளித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு திட்டம் பற்றிய சில எம்.எல்.ஏ.க்கள் கவலைகளை தெரிவித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய தி.மு.க.வும், அதன் உறுப்பினர்.ஐ.பெரியசாமியும் இது பற்றி பேசியது தான்.
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நிலக்கரி படுகை மீத்தேன் வாயு பகுதியினை, ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு 2010-ம் ஆண்டு, ஏலத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இதற்கான அந்த நிறுவனத்துக்கு பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை வழங்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
அங்கு ஆய்வு மற்றும் உற்பத்தியைத் தொடங்க ஏதுவாக, பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை தி.மு.க. அரசு 1.1.11 அன்று வழங்கி, அந்த நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தி.மு.க. அரசு ஏற்படுத்திக் கொண்டது.
இந்த ஒப்பந்தத்தில், இந்தத் திட்டத்திற்குத் தேவையான உரிமங்களை, பல்வேறு துறைகளிலிருந்து பெறுவதற்கும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கும், குழாய்கள் பதிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும், உரிய உதவிகளை தமிழ்நாடு அரசு செய்யும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அனுமதி அளித்திருந்தாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, ஆய்வுப் பணிகளை தொடங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும்.
ஜெயலலிதா விதித்த தடை
கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம், ஆழ்துளை கிணறுகள் அமைக்க கோரியதற்கான அனுமதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு
                                                                                                              மேலும், . . . .

No comments:

Post a Comment