Friday 13 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (14-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (14-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் இன்று பதவி ஏற்கிறார் துணை முதல்-மந்திரியும், 5 மந்திரிகளும் பதவி ஏற்கின்றனர்

புதுடெல்லி, பிப்ரவரி, 14-02-2015,
டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் துணை முதல்-மந்திரியும், 5 மந்திரிகளும் பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.
இன்று மதியம் பதவி ஏற்பு
அண்மையில் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-ஐ வென்று ஆட்சியை கைப்பற்றியது.
தேர்தல் வெற்றிக்கு பின்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
                                                                                                                  மேலும், .. . . 

ஓசூர் அருகே விபத்து பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரெயில் தடம் புரண்டு 9 பேர் பலி 100 பயணிகள் படுகாயம்

பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரெயில் ஓசூர் அருகே தடம் புரண்டதில் 9 பயணிகள் பலி ஆனார்கள். மேலும் 100 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர், பிப்ரவரி, 14-02-2015,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ரெயில்
இந்த ரெயில் தினமும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு ஓசூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை வழியாக எர்ணாகுளத்தை சென்று அடையும்.
வழக்கம்போல் நேற்று காலை 6.15 மணிக்கு இந்த ரெயில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டது.
                                                                                           மேலும், . .. .

இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது ஸ்ரீரங்கம் தொகுதியில் 81.79 சதவீதம் ஓட்டுப்பதிவு திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை

திருச்சி, பிப்ரவரி, 14-02-2015,
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்தது. 81.79 சதவீதம் வாக்குகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை திங்கட்கிழமை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எஸ்.வளர்மதி (அ.தி.மு.க.), என்.ஆனந்த் (தி.மு.க.), எம்.சுப்பிரமணியம் (பா.ஜ.க.), கே.அண்ணாதுரை (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஹேமநாதன்(ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் 24 சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக தொகுதி முழுவதும் 322 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டுகருவிகள் வைக்கப்பட்டு இருந்தன.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு
                                                                                                         மேலும், . . . .

கோர்ட்டு அறைக்குள் வந்து கோஷம் போட்ட வக்கீல்களின் நடவடிக்கை மிகுந்த மனவேதனை அளிக்கிறது தலைமை நீதிபதி கருத்து


சென்னை, பிப்ரவரி, 14-02-2015,
கோர்ட்டு அறைக்குள் வந்து வக்கீல்கள் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது என்றும், 150 ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஐகோர்ட்டுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் வக்கீல்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
கல்லூரி மாற்றம்
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றும் அரசின் முடிவை எதிர்த்து ஜிம்ராஜ் மில்டன் என்ற வக்கீல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி ஆஜராகி, ‘1948-ம் ஆண்டு மூத்த வக்கீல் ஒருவர் எழுதிய கட்டுரையை நேற்று படித்துப்பார்த்தேன். அதில் ஐகோர்ட்டு அருகில் சட்டக்கல்லூரி ஏன் இருக்க வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அந்த காலக்கட்டத்தில் சட்டப்படிப்பையும், வக்கீல் பதிவையும் இந்த ஐகோர்ட்டுதான் மேற்கொண்டுள்ளது.
என்ன நினைப்பார்கள்?
தலைமை நீதிபதி:- சட்டப்படிப்பை ஐகோர்ட்டு வழங்கியது.
                                                                                                                        மேலும், . . . .

No comments:

Post a Comment