Sunday 1 February 2015

இன்றைய முக்கிய செய்திகள் (02-02-2015)

இன்றைய முக்கிய செய்திகள் (02-02-2015) காலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,

சட்டசபைக்கு 7-ந் தேதி தேர்தல் டெல்லியில், ஒரேநாளில் மோடி-சோனியா போட்டி பிரசாரம்

சட்டசபைதேர்தலையொட்டி, டெல்லியில் நேற்று ஒரே நாளில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி, பிப்ரவரி, 02-02-2015,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பாரதீய ஜனதா மும்முரம்
பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதேபோல் தலைநகரான டெல்லியிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் அந்த கட்சியின் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதனால் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய மந்திரிகளும், எம்.பி.க்களும் பிரசார களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது.
மோடி-சோனியா போட்டி பிரசாரம்
தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் போட்டி போட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
                                                                                                                            மேலும், . . . .

மேலூர் பகுதியில் போலீசார் மீண்டும் அதிரடி சோதனை கிரானைட் அதிபர்கள் கைது முறைகேடாக கற்களை வெட்டி எடுத்ததாக வழக்குப்பதிவு

மேலூர், பிப்ரவரி, 02-02-2015,
மேலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக கிரானைட் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிரானைட் முறைகேடு
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில், அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கலெக்டராக இருந்த சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
இந்த புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, பல கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரபல கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட கிரானைட் குவாரிகளின் அதிபர்கள், முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், குவாரி நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர குவாரிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு குவாரிகள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
                                                                                                       மேலும், . . . . .

வேளச்சேரியில் 9 அடி கழிவுநீர் குழியில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு இறைச்சி கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது


ஆலந்தூர், பிப்ரவரி, 02-02-2015,
வேளச்சேரியில் உள்ள கோழி இறைச்சி கடையில் 9 அடி ஆழமுள்ள கழிவுநீர் குழிக்குள் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். இதுதொடர்பாக கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கடை உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோழி இறைச்சி கடை
சென்னை வேளச்சேரி திரவுபதி அம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மகன் கிஷோர்(வயது 6). இவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று காலை 8.30 மணியளவில் ரவிக்குமார் தனது மகன் கிஷோருடன் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஆர்.கே.தேவர் கோழி இறைச்சி கடைக்கு சென்றார்.
கடையில் ரவிக்குமார், இறைச்சி வாங்கிக்கொண்டு இருந்தார். சிறுவன் கிஷோர், அருகில் நின்று விளையாடிக் கொண்டு இருந்தான். இறைச்சி வாங்கி விட்டு ரவிக்குமார் தனது மகனை தேடிய போது அங்கு அவனை காணவில்லை. அருகில் இருந்தவர்கள் இங்கு தான் சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்ததாக கூறினார்கள்.
                                                                                                           மேலும், ., . . . .

திண்டிவனம் அருகே கிணற்றில் பிணம்: பாலியல் பலாத்காரம் செய்து பள்ளி மாணவி கொலையா? நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திண்டிவனம், பிப்ரவரி, 02-02-2015,
திண்டிவனம் அருகே கிணற்றில் பள்ளி மாணவி பிணமாக மிதந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து யாரோ கொலை செய்து விட்டதாகவும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கூறியும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. லாரி டிரைவர். அவரது மனைவி சரிதா. அவர்களது மகள் சசிரேகா (வயது 14). இவர் ஓமந்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சசிரேகா மீண்டும் வீடு திரும்பவில்லை.
                                                                                                   மேலும், . . .

No comments:

Post a Comment