Thursday 31 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (31-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (31-07-2014) நண்பகல், IST- 02.00 மணி, நிலவரப்படி,

பா.ஜனதா–இந்து முன்னணி தலைவர்கள் 11 பேருக்கு தீவிரவாதிகள் குறி?


சென்னை, ஜூலை, 31–07-2014,
வேலூர் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன் முதல், அம்பத்தூர் சுரேஷ் குமார் வரை 6 பேர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்கும் முன்னர், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கு மிரட்டில் கடிதம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் கடிதத்தை அனுப்பிய ஆசாமிகள் அதில், பா.ஜனதா, இந்து முன்னணி தலைவர்கள் 11 பேரின் பெயர்களை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில் ‘தீ’ என்பது வானதி சீனிவாசனையும், சிவகங்கையில் ‘ஜா’ என்பது எச்.ராஜாவையும் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது. இதே போல தஞ்சையில் ‘ம்’ என்பது, அப்பகுதியில் பிரபலமான பா.ஜனதா பிரமுகர் கருப்பு முருகானந்தம் என்று கருதப் படுகிறது. சென்னையில் ‘ன்’ என்பது இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகி ராமகோபாலனை குறிப்பிடு வதாக பார்க்கப்படுகிறது.
இதுதவிர கோவையில் 3 பேரும், திருச்சி, திருப்பூர், நெல்லை, விருதுநகரில் ஒருவரும் மிரட்டல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
                                                                                                                     மேலும், . . .

சென்னை வாலிபர்கள் 2 பேர் கடத்தி படுகொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

சென்னை, ஜூலை, 31–07-2014,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் மருதேரி ஏரிக்கரையில் வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி–சர்ட், ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
அவரது சட்டைப் பையில் புதுவை போட்டோ ஸ்டூடியோவின் அடையாள அட்டை இருந்தது. எனவே அவர் புதுவையை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதே போல, காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலும் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இவரும் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொலையுண்ட 2 பேரும் சென்னையை சேர்ந்த நண்பர்கள் என்ற திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
                                                                                                                  மேலும், . . .

புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் பொறுப்பேற்பு


புதுடெல்லி, 31–07-2014,
ராணுவ தளபதி விக்ரம்சிங் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக், இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நாட்டின் 26–வது ராணுவ தளபதியான அவர், 30 மாதங்கள் அப்பதவியில் இருப்பார். அவருக்கு வயது 59. அவர், கடந்த 1987–ம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.
கடந்த மே மாதம், காங்கிரஸ் கூட்டணி அரசின் இறுதிக்காலத்தில், தல்பீர்சிங் சுஹாக், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
                                                                                                           மேலும், . . . . 

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலடப்பட்ட நாள்: 31-7-1805

சென்னை, ஜூலை, 31–07-2014,
இன்றைய திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756-ம் அண்டு ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தீரன் சின்னமலை பிறந்தார். அவரின் தந்தை பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வந்தது.
இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.
                                                                                                   மேலும், . . . . .

No comments:

Post a Comment