Wednesday 30 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (30-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (30-07-2014) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்

தஞ்சாவூர், ஜூலை 30–07-2014,
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலையானவர்களில் 8 பேர் அதிகாரிகள், 3 பேர் ஆசிரியைகள். அவர்கள் விவரம் வருமாறு:–
                                                                                                  மேலும், . . . . . 

கோவையில் 7 இடங்களில் குண்டு வெடிக்கும் கமிஷனர் ஆபீசுக்கு போனில் மிரட்டல்

கோவை, ஜூலை 30–07-2014,
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கோவையில் 7 இடங்களில் இன்று குண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்தார்.
அவரிடம் போலீசார், "நீங்கள் யார்? எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்ற கேட்டபோது அந்த நபர், "அதையெல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. குண்டு வெடிக்கும் என்றால் வெடிக்கும். முடிந்தால் தடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
"எந்த இடத்தில் வெடிக்கும்?" என்று போலீசார் கேட்டபோது "கணபதி...கணபதி..." என்று கூறிவிட்டு போனில் பேசியவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.
                                                                                             மேலும், . . . . .

விவாகரத்து வழக்கு ஹிருத்திக் ரோஷன் மனைவிக்கு ரூ.380 கோடி ஜீவனாம்சம்
மும்பை, ஜூலை. 30–07-2014,
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசன்னேவை கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சுசன்னே இந்தி நடிகர் சஞ்சய் கானின் மகள். இந்த தம்பதியினருக்கு ஹிரே கான்(வயது 7), ஹிருதான்(5) ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சமீபகாலமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 6–ந் தேதி ஹிருத்திக் ரோசனின் தந்தை ராகேஷ் ரோசன் தனது 64–வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். அப்போது, ஹிருத்திக் ரோசனின் மனைவி சுசன்னே காலதாமதமாக வந்தார். அவருடன் அவரது தாயார் சரைன் கான், தந்தை சஞ்சய் கான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
                                                                                                           மேலும், . . . . 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு அரசு வேலை–நிதியுதவி: ஜெயலலிதா

சென்னை, ஜூலை. 30–07-2014,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் முதல்–அமைச்சரின் தனிப் பிரிவிற்கு அளித்த மனுவில், தனது பெற்றோர் தன்னை பத்து ஆண்டுகளுக்கு முன்பு விட்டுச் சென்றதாகவும், 16.2.2014 அன்று சதீஷ்குமார் என்பவர் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகத் தாக்கி, நடுக்காட்டில் போட்டு விட்டு சென்றுவிட்டதாகவும், மயக்க நிலையில் இருந்த தன்னை உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்ததாகவும் தெரிவித்து, தன்னுடைய துர்ப்பாக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, தன் மீது கருணை வைத்து உதவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைக் கருணையுடன் பரிசீலித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இது குறித்து விசாரித்து அறிக்கை அனுப்புமாறு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்கள்.
விசாரணை அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண் சிறு வயதாக இருக்கும்போதே, அவரது தந்தை மற்றும் தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து தனித்தனியாக சென்று விட்டபடியால் தனித்து விடப்பட்ட நிலையில் அப்பெண் அவரது பெரியப்பா வீட்டில் வளர்ப்பு மகளாக வளர்ந்து வந்துள்ளார்.
                                                                                                மேலும், . . . . .

No comments:

Post a Comment