Saturday 26 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (26-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (26-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

கடற்கரை போர் நினைவு சின்னத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

சென்னை, ஜூலை.26–07-2014,
கடந்த 1999–ம் ஆண்டு மே 3–ந்தேதி பாகிஸ்தான் படையினர் காஷ்மீர் மாநிலம் கார்கில் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் எதிர்த்து போரிட்டு ஜூலை 26–ந்தேதி இந்திய பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அனைவரையும் விரட்டி அடித்தனர்.
ஆபரேசன் விஜய் என்ற பெயரில் நடந்த அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. சிறப்பு வாய்ந்த இந்த கார்கில் போரில் இந்தியா 527 வீரர்களை தியாகம் செய்தது.
                                                                                                  மேலும், . . . 

மேஜர் சரவணன் போன்ற இளைஞர்கள் நாட்டுக்கு வேண்டும்: தாயார் பேட்டி

திருச்சி, ஜூலை, 26-07-2014,
26– 1999–ம் ஆண்டு மே மாதம் இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் 14,229 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜூபார் மலைப்பகுதியான பட்டாலிக் பகுதியில் எல்லைப்பகுதியை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருந்தது.
இந்த ராணுவ படைக்கு திருச்சி பீம நகரை சேர்ந்த 28 வயதே ஆன மேஜர் சரவணன் தலைமை தாங்கினார். 26–ந் தேதி அதிகாலை 4 மணிக்கு உடலை உறைய வைக்கும் கடும் குளிர், பட்டாலிக் பகுதியில் பரவியிருந்தது.
அப்போது பாகிஸ்தான் எதிரிகள் இந்திய எல்லைக்குள் பயங்கர ஏவுகணைகளுடன் ஊடுருவி விட்டதாக தலைமை அதிகாரிகளிடம் இருந்து மேஜர் சரவணனுக்கு தகவல் வந்தது.
உடனே தனது படை வீரர்களுடன் மேஜர் சரவணன், எதிரிகளை தடுத்து அவர்களை அழித்து வீழ்த்த வேகமாக முன்னேறி சென்றார்.
                                                                                                                           மேலும் , ., . 

இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய நாள்

கங்கை கொண்ட சோழபுரம், ஜூலை 26–07-2014,
தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது.
கி.பி 1014 ஆம் ஆண்டு அரியணை ஏறிய இராஜேந்திர சோழன் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்ட பெருமை கொண்டவன். அவன் மன்னனாக பதவி வகித்த கடைசி 15 ஆண்டுகள் போருக்கு செல்லாமல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை நலனுக்காகவும் காவல் அரணாக நின்றான். இந்த காலகட்டத்தில் சோழ நாட்டில் ஏராளமான ஏரிகள், குளங்கள் வெட்டப்பட்டன. அதில் ஒன்று அங்குள்ள சோழகங்கம் ஏரி.
இராஜேந்திரனின் இந்த அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஒட்டுமொத்த தமிழகமே கொண்டாடியிருக்கவேண்டும்.
                                                                                                                    மேலும் , , . . .
இன்று ஆடி அமாவாசை வேதாரண்யம் – பூம்புகாரில் பக்தர்கள் புனித நீராடினர்
வேதாரண்யம், ஜூலை 26–07-2014,
ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு பித்ருகடன் செலுத்தும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பகுதியில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அவர்கள் ஆதிசேது என்றழைக்கப்படும் கோடிக்கரையில் உள்ள கடலில் அக்னி தீர்த்தம் சித்தர் கட்டம் என்ற இடத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர்.
                                                                                                                    மேலும், . . .
                                                                                                                       

No comments:

Post a Comment