Tuesday 15 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (15-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (15-07-2014) மாலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

பிரபல ரவுடி கேட் ராஜேந்திரன் பற்றிய பரபரப்பு தகவல்கள்

சென்னை, 15-07-2014,
திருவொற்றியூரை சேர்ந்தவர் கேட் ராஜேந்திரன் பிரபல ரவுடியான இவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வடசென்னையை கலக்கி வந்தவன்.
திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை, போலீஸ் நிலையங்களில் இவன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேட் ராஜேந்திரன் கடந்த மாதம் 3-ந்தேதி தான் சிறையில் இருந்து வெளியில் வந்தான்.
இன்று காலையில் சாப்பிடுவதற்காக வெளியில் வந்தான். பெரிய பாளையம் ரால்லபாடி பகுதியில் போலீஸ் குடியிருப்புக்கு அருகில் உள்ள கடையில் சாப்பிட சென்ற கேட் ராஜேந்திரனை 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வெட்டியது. இதில் தலை, கழுத்து, கை, கால்களில் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அவன் பலியானான்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பெரிய பாளையம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கேட் ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட கேட் ராஜேந்திரனுக்கு 55 வயது ஆகிறது. மேகலா என்ற மனைவியும், கண்ணன், கலைமணி என்ற 2 மகன்களும் உள்ளனர்.
பெரியபாளையத்தில் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்ட ‘கேட்’ ராஜேந்திரன் கடந்த 1989–ம் ஆண்டில் இருந்து 1994 வரை சென்னை போலீசுக்கு பெரும் தலைவலியாக விளங்கியவன்.
                                                                                                                மேலும், . . .  

ஹபீஸ்சயீத் சந்திப்பு விவகாரம்: பாராளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஜூலை, 15–07-2014,
மும்பையில் 2008–ம் ஆண்டு தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 166 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீது. பாகிஸ்தானை சேர்ந்த இவன் ஜமாத்–உத்–தவா தீவிரவாத இயக்கத் தலைவன் ஆவான்.
இந்த நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் யோகாகுரு பாபா ராம்தேவ்வின் நெருங்கிய உதவியாளரும், பத்திரிகையாளருமான வைதிக் தீவிரவாதி ஹபீஸ் சயிதை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2–ந்தேதி லாகூரில் இந்த சந்திப்பு நடந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது.
                                                                                                                     மேலும், . . .

தமிழகத்தின் மனுவை விசாரிக்க காவிரி நடுவர் மன்றம் மறுப்பு
புதுடெல்லி, ஜூலை, 15–07-2014,
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் இன்று கூடிய காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமிழகம், கர்நாடகம் இடையேயான காவிரி நதி நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 1990–ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று 1991–ல் இடைக்கால உத்தரவு வழங்கியது. அதன் பிறகு 2007–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5–ந்தேதி இறுதித்தீர்ப்பை வழங்கியது.
அதில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 419 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.
                                                                                                         மேலும், . . .

112–வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூலை, 15–07-2014,
பெருந்தலைவர் காமராஜரின் 112–வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், இளங்கோவன், திருநாவுக்கரசர், கட்சி தலைவர் ஞானதேசிகன், செல்வபெருந்தகை, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பா.ம.க. முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் உருவ படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், முன்னாள் மாநில தலைவர் குமரிஅனந்தன், ஜெ.குமார், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், நாஞ்சில் பிரசாத், சைதை ரவி, இ.சி.சேகர், மணிபால், ஜவகர்பாபு, வில்லிவாக்கம், சுரேஷ், நடிகர் ராஜ்குமார், ஜி.சேகர், வெங்கடேஷ், தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உ.பலராமன், மாறன் மற்றும் டி.என். அசோகன், வழக்கறிஞர் டி.எம்.பிரபாகர், வேலுத்தேவர், ஜான்சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆலந்தூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் படத்திற்கு நகர தலைவர் நாஞ்சில் பிரசாத் மாலை அணிவித்து மாணவ – மாணவிகளுக்கு

                                                                                        மேலும் , . .

No comments:

Post a Comment