Tuesday 22 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (23-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (23-07-2014) காலை, IST- 06.00 மணி, நிலவரப்படி,

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற 100–வது நாளில் செயல்படுத்த நடவடிக்கை
புதுடெல்லி, 23-07-2014,
இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி 17 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளார். இதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100–வது நாளின்போது அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 அம்ச திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார்.
இந்த திட்டம் கடந்த 10–ந்தேதி இறுதி செய்யப்பட்டு மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதன் மீதான விரிவான செயல் திட்டத்தையும், அவற்றை அமல்படுத்துவது தொடர்பான கருத்துகளையும் ஜூலை 20–ந்தேதிக்குள் உருவாக்கித் தருமாறும் அந்த அமைச்சகங்கள் கண்டிப்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டன.
100–வது நாளில் அறிவிப்பு
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற 100–வது நாள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வருகிறது.
                                                                                                                                மேலும், . . .

முதுமையை குறிப்பிட்டு பட்டேல் திட்டினார் கடைசி நாட்களில் காந்தியின் சொல்லை பலர் கேட்கவில்லை உதவியாளர் கல்யாணம் பேச்சு

சென்னை, 23-07-2014,
காந்தி இறக்கும்போது ‘ஹேராம்’ என்ற வார்த்தையை கூறவில்லை என்றும், அவரது கடைசி நாட்களில் பலர் அவருடைய பேச்சை கேட்கவில்லை என்றும் காந்தியின் நேர்முக உதவியாளர் கல்யாணம் கூறினார்.
கருத்தரங்கு
சென்னை ஐகோர்ட்டின் 150–வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மெட்ராஸ் பார் அசோசியேஷன்’ என்ற வக்கீல் சங்கம் தொடர் கருத்தரங்கு நடத்தி வருகிறது.
‘காந்தியின் கடைசி நாள்’ என்ற தலைப்பில் மகாத்மா காந்தியிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய வி.கல்யாணம் உரையாற்றும் கருத்தரங்கு நேற்று நடந்தது.
                                                                                              மேலும், . . . 

சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொள்ள தடை சென்னையில் கருணாநிதி தலைமையில் 31–ந் தேதி கண்டன கூட்டம்

சென்னை, 23-07-2014,
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னையில் வரும் 31–ந் தேதி கருணாநிதி தலைமையிலும், ஆகஸ்டு 1 மற்றும் 2–ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் கண்டன கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் 3 முறை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டிருப்பதால் இனி இந்த கூட்டத்தொடர் முழுவதும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாது என்று சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
                                                                                                     மேலும், . . . 
பெரியபாளையம் அருகே கிராம மக்களிடையே மோதல் போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அதிரடிப்படையினர் குவிப்பு

பெரியபாளையம், 23-07-2014,
பெரியபாளையம் அருகே கிராம மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 போலீசார் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிராம மக்களிடையே மோதல்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் அருகே உள்ள அணைக்கட்டில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறும்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவிழாவுக்கு கொசஸ்தலை ஆற்றின் வடக்கு பகுதியில் உள்ள புன்னபாக்கம் கிராம மக்களும், கொசஸ்தலை ஆற்றின் தெற்கு பகுதியில் வசிக்கும் வெள்ளியூர் கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர்.
சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும்போது புன்னபாக்கம் கிராம மக்களுக்கும், வெள்ளியூர் கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
                                                                                                  மேலும், . . . 

No comments:

Post a Comment