Monday 7 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (07-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (07-07-2014) மாலை, IST- 05.30 மணி, நிலவரப்படி,

கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஜூலை, 07-07-2014,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பு ஏற்ற பிறகு முதன் முதலாக இன்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14–ந்தேதி வரை மொத்தம் 28 நாட்கள் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் மாநிலங்களவையில் பிரகாஷ் ஜவதேகர், பிரபுல் படேல், நிர்மலா சீதாராமன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். மக்களவையில் மறைந்த உறுப்பினர் ஹர்பஜனுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு சபை நடவடிக்கைகள் கேள்வி நேரத்துடன் தொடங்குவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் ரெயில் கட்டண உயர்வு பற்றியும், விலைவாசி உயர்வு பற்றியும் குரல் எழுப்பப் போவதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம்,
                                                                                              மேலும், . . . 

தர்மபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்றவர்களின் மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

புதுடெல்லி, ஜூலை, 07-07-2014,
பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம்தேதி கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் சென்ற பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 மாணவிகள் உயிரிழந்தனர்.
                                                                                                 மேலும் , . . . 

விலை உயர்வுக்கு காங்கிரஸ்கே காரணம்; ராஜ்யசபாவில் அருண்ஜெட்லி பதில்
புதுடில்லி, ஜூலை, 07-07-2014,
சமீபத்திய விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய நிதி அமைச்சர் ராஜ்யசபாவில் எதிர்கட்சியினரின் விவாதத்தின் மீது பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
எதிர்கட்கள் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்று கொண்டு அருண்ஜெட்லி பதில் அளிக்கையில் அவர் கூறியதாவது;
                                                                                                     மேலும், . . . 

நதி நீர் பிரச்சினை: கருணாநிதி புகாருக்கு ஜெயலலிதா பதில்







சென்னை, ஜூலை, 07-07-2014,
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
அரசியல் ஆதாயம் அடையலாம் என்று எதிர்பார்த்து “நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்” என்ற தலைப்பில் ஒரு வெத்துவேட்டு அறிக்கையை வெளியிட்டு, வாங்கிக் கட்டிக் கொண்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, தனது அறியாமையை மூடி மறைக்க, “அரைவேக்காடு யார்?” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். ஆங்கிலத்திலே ஒரு சொல்லடை உள்ளது. அதாவது வாய்மூடி மவுனியாக இருந்து முட்டாள் என்று பிறர் நினைப்பது, வாயைத் திறந்து அனைத்து ஐயப்பாடுகளையும் நீக்கி, தான் ஒரு முட்டாள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குவதைவிட மேலானது”” என்பது இதன் பொருள் ஆகும்.
இந்த இலக்கணத்திற்கு ஏற்ப மீண்டும் வாயைத் திறந்து, தான் ஒரு அரைவேக்காடு தான் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் கருணாநிதி.
நதிநீர்ப் பிரச்சனை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்த நான், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம் மற்றும் துணக்கடவு ஆகிய அணைகள் குறித்து 2009 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?, 2012 ஆம் ஆண்டு வரையிலான விவரங்களை உள்ளடக்கிய 2009 ஆம் ஆண்டைய புதுப்பிக்கப்பட்ட தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது?
2013 ஆம் ஆண்டைய பெரிய அணைகள் குறித்த தேசியப் பதிவேட்டில் என்ன இருந்தது? என்பது குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டியதோடு, மேற்படி நான்கு அணைகளும் தமிழ்நாட்டிற்கு சொந்தமானவை என்ற தமிழ்நாட்டின் உரிமை, அணைப் பாதுகாப்பு தேசியக் குழுக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் சுட்டிக் காட்டினேன்.
                                                                                                                மேலும் , . . . 

No comments:

Post a Comment