Sunday 6 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (06-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (06-07-2014) மாலை, IST- 04.30 மணி, நிலவரப்படி,

எம்எல்சி தேர்தலில் ஆதரவு தர ரூ.40 கோடி பேரம் பேசியதை ஒப்புக் கொண்ட குமாரசாமி
பெங்களூர், ஜூலை, 06-07-2014,
எம்.எல்.சி. தேர்தலில் ஆதரவு தர ரூ.40 கோடி பேரம் பேசியதை குமாரசாமி ஒப்புக் கொண்டார்.
கர்நாடக மாநில சட்டசபை மேலவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. பிஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜிகவுடா பாட்டீல் என்பவர் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பி முன்னாள் முதல்–மந்திரி எச்.டி.குமாரசாமியிடம் ஆதரவு கேட்டார்.
குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளத்தில் 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
                                                                                                                 மேலும், . . . .

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 பேர் பலி

செங்குன்றம், ஜூலை, 06-07-2014,
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேரை காவு வாங்கிய சோக சுவடுகள் இன்னும் இதயங்களை விட்டு அகலாத நிலையில் இன்று நடந்த ஒரு கட்டட விபத்து நெஞ்சை உறைய வைத்துள்ளது.
செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையில் அலமாதி அருகே உள்ளது எடப்பாளையம். இங்கிருந்து உப்பரபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய 2 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. இந்த சேமிப்பு கிடங்குகளை செங்குன்றம் எம்.ஏ.நகரை சேர்ந்த தொழிலதிபர் பாலன் என்பவர் தனியார் மருந்து கம்பெனிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த மருந்து நிறுவனங்கள் ஏராளமான மருந்துகளை இந்த சேமிப்பு கிடங்குகளில் சேமித்து வைத்து சப்ளை செய்து வருகின்றன.
இந்த குடோன்களுக்கு எதிரே புதிதாக 3–வதாக ஒரு குடோனை பாலன் கட்டி வருகிறார்.
                                                                                                     மேலும், . . . . 

நரேந்திர மோடி ஆட்சியில் தவறு நடந்தால் தட்டி கேட்போம்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

விருதுநகர், ஜூலை, 06-07-2014,

விருதுநகரில் ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் கள ஆய்வுப்பணிக்காக வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நரேந்திர மோடியில் ஆட்சியில் தவறு நடந்தால் தட்டி கேட்போம் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
கட்சியை வலுப்படுத்த கள ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளையும்,
                                                                                                                    மேலும், . . .  

நடிகர் ஆதித்ய பஞ்சோலி குடும்பத்தினர் நடிகை ஜியாகான் தாயாரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு
மும்பை, ஜூலை, 06-07-2014,
மறைந்த நடிகை ஜியாகான் தாயாரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு, நடிகர் ஆதித்ய பஞ்சோலி குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணை
இந்தி நடிகை ஜியாகான் கடந்த ஆண்டு ஜூன் 3–ந் தேதி மும்பை ஜூகுவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகனுமான சூரத் பஞ்சோலியை போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளி வந்தார்.இந்த நிலையில், தனது மகள் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரியும் ஜியாகானின் தாயார் ரபியா கான் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
அவதூறு வழக்கு
இந்த நிலையில் நடிகர் ஆதித்ய பஞ்சோலி, அவரது மனைவியும், நடிகையுமான சரீனா, மகள் சனா ஆகியோர் மும்பை ஐகோர்ட்டில்,
                                                                                                                     மேலும், . . . 

No comments:

Post a Comment