Saturday 5 July 2014

இன்றைய முக்கிய செய்திகள் (05-07-2014)

இன்றைய முக்கிய செய்திகள் (05-07-2014) மாலை, IST- 05.00 மணி, நிலவரப்படி,

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேர் விடுதலை



புதுடில்லி, 05-07-2014,
ஈராக்கில், ஐ.எஸ். ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள், 46 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்டு வர, 'ஏர் இந்தியா' நிறுவன பயணிகள் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் இன்று நாடு திரும்பினர்.
ஈராக்கில், சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அந்நாட்டு அரசுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் ராணுவத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில், முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருவதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஈராக்கின் திக்ரித் நகரில் பணியாற்றி வந்த, இந்தியாவைச் சேர்ந்த, 46 நர்ஸ்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக,
                                                                                                          மேலும், . . . . 

100 வனத்துறை கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

சென்னை, ஜூலை, 05-07-2014,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
சென்னை, டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள பொருளியியல் மற்றும் புள்ளிஇயல் துறை தலைமையகத்தில் தரைதளம் மற்றும் நான்கு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தின் தரைத் தளத்தில் வரவேற்பாளர் அறை, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள பாதை, வாகனங்கள் நிறுத்துமிடம்; முதல் தளத்தில் முதன்மை செயலர் மற்றும் ஆணையர் அறைகள், கூட்ட அரங்கம்; இரண்டாம் தளத்தில் இணை இயக்குநர் அறை, உதவி இயக்குநர்கள் அறை, பணியாளர்கள் அறை; மூன்றாம் தளத்தில் கூடுதல் இயக்குநர்கள் அறை மற்றும் நூலகம்; நான்காம் தளத்தில் இணை இயக்குநர் அறை, கணினி அறை உள்ளிட்ட வசதிகளுடன் 4 கோடியே 69 லட்சத்து 18 ஆயிரத்து 670 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;
52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சேலம் மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கோட்ட அலுவலகக் கட்டடங்கள்;
என மொத்தம் 5 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரத்து 670 ரூபாய் மதிப்பீட்டில் பொருளியியல் மற்றும் புள்ளிஇயல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
                                                                                                 மேலும், . . . . 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 86 அடுக்குமாடி கட்டிடங்களில் அதிகாரிகள் சோதனை

சென்னை, ஜூலை, 05-07-2014,
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்து சம்பவத்தை தொடர்ந்து சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 84 கட்டிடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்
சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதிக்கு உட்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதா? விதிமீறல் உள்ளதா?
                                                                                                 மேலும், . . .. 

கட்டிட விபத்து: 59 பேரின் உடல் ஒப்படைப்பு-ஒருவரின் உடல் அடையாளம் தெரியவில்லை

சென்னை, ஜூலை, 05-07-2014,
சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இறந்தவர்களில் 6 பேர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்த 55 பேரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
                                                                                                                              மேலும், . . .

No comments:

Post a Comment